மருந்துப்பொருட்கள் தொழில்துறையில் நுழையும் அக்கார்டு குழுமம்

0
176


சென்னை, 12 மார்ச் 2020: சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் ஒரு முன்னணி தனியார் துறை நிறுவனமான அக்கார்டு குரூப், மருந்து தயாரிப்பு மற்றும் வினியோக தொழில்துறையில் கால்பதிக்கிறது. இந்நிறுவனமானது, சுகாதார பராமரிப்பு, விருந்தோம்பல், தகவல் தொழில்நுட்பம், ரியால்டி, மின்சக்தி உற்பத்தி, கல்வி, டிஸ்லெரிகள், அச்சு மற்றும் விஷ்வல் ஊடகம் ஆகிய பிரிவுகளில் ஏற்கனவே கொண்டிருக்கும் சிறப்பான அறிவு மற்றும் அனுபவத்தோடு ஃபார்மா தொழில்துறையிலும் இப்போது நுழைந்திருக்கிறது. சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் அக்கார்டு குழுமம், அக்கார்டு லைஃப் ஸ்பெக் பிரைவேட் லிமிடெட் (அக்கார்டு ஃபார்மா) என்ற பெயரில், ஸ்டெரைல் மற்றும் நான்-ஸ்டெரைல் (தூய்மையான மற்றும் நுண்ணுயிர் கொண்ட) மருந்து தயாரிப்புகள் மீது ஆராய்ச்சி மற்றும் உருவாக்கம், தயாரிப்பு மற்றும் வழங்கல் மீது முக்கிய கூர்நோக்கத்தோடு தனது செயல்பாட்டைத் தொடங்கியிருக்கிறது. பல்வேறு நாடுகளில் மட்டுமல்லாது, இந்திய மருந்துப் பொருட்கள் சந்தையிலும் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

அக்கார்டு ஃபார்மா – இந்தியா பிசினஸ்-ன் முதுநிலை துணைத்தலைவர், விற்பனை மற்றும் சந்தையாக்கல் – திரு. சத்தீஷ் சிங் மற்றும் அக்கார்டு லைஃப் ஸ்பெக் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை செயல் அதிகாரி திரு. மனிஷ் சுபே ஆகியோரின் கூற்றுப்படி, தற்போது நிலவுகிற சவால்மிக்க மற்றும் போட்டி நிறைந்த மருந்து பொருட்களுக்கான சூழலமைப்பில் நோயாளிகளுக்கு புத்தாக்கமான தயாரிப்புகளை வழங்கும் அம்சத்தில் இந்நிறுவனத்தை ஒரு உலகளாவிய சிறப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமாக ஆக்குவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தர விதிகளுக்கான இணக்கநிலை மீதும் மற்றும் நன்னெறி மற்றும் நேர்மைக்கான மிக உயர்ந்த தர நிலைகளின்படி இயங்குவது மீதும் கொண்டிருக்கும் வலுவான பொறுப்புணர்வின் மூலம் இச்செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்று இந்த இரு உயர் அதிகாரிகளும் குறிப்பிட்டனர். அவர்கள் மேலும் பேசுகையில், “எங்கள் மீது எமது வாடிக்கையாளர்களும், பிற அக்கறை பங்காளர்களும் கொண்டிருக்கிற எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கையை நாங்கள் நன்கு உணர்ந்தவர்களாக இருக்கிறோம். இன்னும் ஆரோக்கியமான சிறந்த உலகை உருவாக்குவது என்ற குறிக்கோளை நோக்கி நாங்கள் செயல்படுகிறோம். யுஎஸ்ஏ, ஐரோப்பா மற்றும் பிற நாடுகள் உட்பட சர்வதேச சந்தைகளில் எமது நிறுவனமானது அடுத்த ஆண்டிருந்து பல்வேறு மருந்து தயாரிப்பு பொருட்களை அறிமுகம் செய்யும்,” என்று கூறினர்.

முதல் கட்ட நடவடிக்கையாக, தரம் மற்றும் தேவைக்கு இடையில் உள்ள இடைவெளியை நிரப்பும் வகையில் புற்றுநோயியல் மற்றும் சிறுநீரகவியல் பிரிவுகளில் இரு முக்கிய சிகிச்சை மருந்துகள் அறிமுகத்தின் மூலம் இந்திய சந்தையில் அக்கார்டு குழுமம் நுழைகிறது. இரத்த புற்றுநோய், மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், ஹீமோ டயாலிசிஸ், மாற்று சிறுநீரகம் பொருத்துதலின் போது சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான மருந்துகளை இதன் தயாரிப்பு அணிவரிசை கொண்டிருக்கிறது.

மருந்து தயாரிப்புகள் மீதான ஆராய்ச்சி மற்றும் உருவாக்கம் மற்றும் உற்பத்தி தொழிலகங்கள் குறித்து பேசிய அவர்கள், “சென்னையில் ஓரகடத்தில் அமைந்துள்ள உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி தொழிலக அமைவிடமானது, வாய் மூலம் அல்லாமல் பிற வழியில் மருந்தளிப்புக்குரிய மற்றும் வாய்வழியாக உட்கொள்ளும் திட மருந்து தயாரிப்புகளுக்கான (புற்றுநோயியல் மற்றும் புற்றுநோயியல் சாராத பிற) வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், உற்பத்தி மற்றும் வழங்கல் செயல்பாடுகளுக்கு அவசியமான மிக நவீன சாதனங்களை கொண்டிருக்கிறது,” என்று கூறினர்.

இந்த இரு நிபுணர்களும் இது குறித்து மேலும் விளக்கமளித்தபோது, “ஏற்றுமதியை இலக்கு குறிக்கோளாகக் கொண்ட எமது உற்பத்தி தொழிலகமானது (EOU), USFDA, UK-MHRA, PIC/S, TGA-ஆஸ்திரேலியா, ஹெல்த் கனடா, ANVISA-பிரேசில், MCC-தென் ஆப்பிரிக்கா, இந்தியா-DCA ஆகிய உயர் மருத்துவ அங்கீகார அமைப்புகளின் வழிகாட்டல் வரைமுறைகளின்படி அவசியமாக இருக்கிற நடப்பு சிறந்த உற்பத்தி நடைமுறை கோட்பாடுகளின்படி கண்டிப்பான அளவுகோல்களுக்கு இணங்கியவாறு கட்டப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டனர்.

புதுச்சேரியில் அமைந்துள்ள அக்கார்டு லைஃப் ஸ்பெக் நிறுவனத்தின் உலகத்தரம் வாய்ந்த ஆக்டிவ் ஃபார்மசூட்டிகல் இன்கிரீடியன்ட்ஸ் (API) / பயோடெக் ரிசர்ச் அண்டு டெவலப்மெண்ட் சென்டர், நீண்டகால அளவில் பிற நிறுவனங்களோடு போட்டியிடும் திறன் கொண்ட மற்றும் இலாபகரமான மருந்து தயாரிப்பு பொருட்களை உருவாக்குவது மீது கூர்நோக்கம் செலுத்தி வருகிறது.

“புற்றுநோயியல் சார்ந்த மருந்துகள் மற்றும் பிற மருந்துகளுக்கான உருவாக்கம் மற்றும் தயாரிப்பில் ஆதரவை விழைகின்ற நிறுவனங்களோடு முக்கியத்தும் வாய்ந்த கூட்டாண்மைகளை மேற்கொள்வதன் மூலம் தனது பிசினஸ் செயல்பாட்டை இன்னும் உயர்த்துவதற்கான புதிய வாய்ப்புகளை அக்கார்டு லைஃப் ஸ்பெக் தொடர்ந்து கண்டறிந்து வருகிறது,” என்று அவர்கள் மேலும் கூற

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here