‘சென்னையில் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவில் குழந்தைகளுக்கான வார்டுகளுக்கு 200 போர்வைகளை நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் வினியோகித்தது ‘

0
153

சென்னை, மார;ச் 6, 2020: தற்போது நடைபெற்று வருகின்ற புற்றுநோய் விழிப்புணர்வு மாத அணுசரிப்பையொட்டி, நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட், சமுதாயத்திற்கு ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை செய்யவேண்டும் என்ற தனது தொடர்ச்சியான செயல் நடவடிக்கையின் ஒரு அங்கமாக சென்னை மாநகரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவனையின் குழந்தைகளுக்கான வார்டுகளில் உள்ள குழந்தைகளுக்கு 200 போர்வைகளை இன்று வழங்கியது. நோயறிதலுக்கான பரிசோதனையக சங்கிலித்தொடர் பிரிவில் ஒரு புதிய ஸ்டார்ட்அப் நிறுவனமாக நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் செயலாற்றி வருகிறது.

நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் – ன் குழும முதன்மை இயக்க அலுவலர் ஆள. ஐஸ்வர்யா வாசுதேவன் இந்நிகழ்ச்சியின்போது பேசுகையில், “குழந்தைப்பருவ புற்றுநோய் என்பது, ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு, உரியவாறு சிகிச்சையளிக்கப்படுமானால், குணப்படுத்தப்படக் கூடியதே. புற்றுநோய் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு பொதுவாகவே உடல்சார்ந்த, மனநலம் சார்ந்த மற்றும் உணர்வு ரீதியான ஆதரவும், அக்கறையும் தேவைப்படுகிறது. புற்றுநோய்க்கான சிகிச்சை அநேக நேரங்களில் நீண்டகாலம் தொடரக்கூடியதாக இருப்பதால் அக்குழந்தைகளை நம்பிக்கையும், தைரியமும் நிறைந்த மனநிலையில் அவர்களை இருக்குமாறு செய்வதற்கான முயற்சிகள் கண்டிப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும். அநேக நேரங்களில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் பல வாரங்கள் அல்லது பல மாதங்கள் தொடர;ந்து தங்கி சிகிச்சைப்பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இது அந்த சின்னஞ்சிறு குழந்தைகளின் உடல்களிலும், மனங்களிலும் கடும் பாதிப்பையும், மனச்சோர்வையும் ஏற்படுத்துகிறது. இது, எந்த அளவுக்கு கடுமையானதாக இருக்கிறதென்றால், அவர்களது முகங்களில் புன்னகைகளைப் பார்ப்பதே அரிதாகிவிடுகிறது. அந்தப் பிஞ்சுக்குழந்தைகளின் முகங்களில் புன்னகைகளை திரும்பவும் காணவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இன்று வழங்கப்பட்டிருக்கும் இந்த போர்வைகள், இதற்கான நோக்கத்திற்காக எங்களது மிகச்சிறிய பங்களிப்பாக இருக்கின்றது. அவர்களுக்கு நெருக்கமான உணர;வை தரவும் மற்றும் அவர்களது வாழ்க்கையில் உற்சாகம் மற்றும் நம்பிக்கையின் ஒளிக்கீற்றையும் கொண்டு வரவும் வேண்டுமென்பதே எங்களது விருப்பமாகும்,” என்று கூறினார்.

குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரேமா சந்திரமோகன் முன்னிலையில் இக்குழந்தைகளுக்கு போர்வைகள் வினியோகிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் டாக்டர் ரேமா சந்திரமோகன் பேசுகையில், “இந்த உன்னதமான செயல்முயற்சியை மேற்கொண்டதற்காக நியூபெர்க் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு போர்வைகளை வினியோகிக்கும் இந்நிகழ்வை நேரில் பார்ப்பதும் மற்றும் எமது மருத்துவமனையில் புற்றுநோய்க்கு எதிராக தைரியத்தோடு போராடி வரும் குழந்தைகள் மீது இந்த கனிவான செயல்பாடு ஏற்படுத்தும் தாக்கத்தையும் காண்பது மனதிற்கு இதமான ஒரு அனுபவமாக இருக்கிறது. இதுபோன்ற எளிய, சிறிய நடவடிக்கைகள் உண்மையிலேயே அர்த்தமுள்ளவையாகவும் மற்றும் ஆக்கப்பூர்வ தாக்கம் ஏற்படுத்துபவையாகவும் இருக்கக்கூடும்,” என்று குறிப்பிட்டார்.
.
நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் – ன் தொழில்நுட்ப இயக்குனரும், தலைமை நுண்ணயிரியல் வல்லுனருமான டாக்டர் சரண்யா நாராயண், குழந்தைகள் மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு போர்வை வினியோகம் செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டபோது, “புற்றுநோய்க்கான அறிகுறிகள், புற்றுநோயின் வகையையும், உடலில் எந்த இடத்தில் அது இருக்கிறது என்பதையும் சார்ந்திருக்கிறது. குழந்தைகளிடம் ஏற்படும் புற்றுநோயின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளை பெற்றோர்கள் உட்பட, பிறர் அறிந்திருப்பது முக்கியமானதாகும். தொடக்க நிலையிலேயே புற்றுநோய் பாதிப்பை அடையாளம் காண்பது, வெற்றிகரமான சிகிச்சை மற்றும் குணம் பெறுவதற்கான வாய்ப்புகளை பெருமளவில் அதிகரிக்கிறது,” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here