டாடா டீ சக்ரா கோல்ட் தமிழின் பாரம்பரியமிக்க உணவுகளின் ப்ரத்யேக விழாவை கொண்டாடியது

0
119


சென்னை-பழமையான பாரம்பரியம் கொண்ட தமிழ் கலாச்சாரத்தை, அதன் உண்மையான வழிமுறையில் கொண்டாடும் வகையில், தமிழ் வாழ்வியலின் தனித்துவமிக்க முறையை எடுத்துரைக்கும் நோக்கில், டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ்-ன் [டாடா க்ளோபல் பிவரேஜஸ் – Tata Global Beverages என்று முன்பு அழைக்கப்பட்டது] முதன்மை நிறுவனங்களில் ஒன்றான டாடா டீ சக்ரா கோல்ட், தமிழின் பாரம்பரிய உணவு திருவிழாவைக் கொண்டாடியது.இந்த மாபெரும் உணவுத் திருவிழாவில் தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் சேர்ந்த, உள்ளூர் சமையற்கலை நிபுணர்களின் அறுசுவைக் கொண்ட உணவுகள் இடம்பெற்றன. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கும் மெரீனா மால் இவ்விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

டாடா டீ சக்ரா கோல்ட்டின் உயிர்ப்புள்ள சாரத்தையும், சந்தையில் அதன் பிராந்தியத்தை மிகச்சிறந்த முறையில் புரிந்துகொண்டிருக்கும் தன்மையையும் மனதில் கொண்டு, அவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த உணவுத் திருவிழாவின் கருத்துருவாக்கம் செய்யப்பட்டது. மேடையின் தோற்றம் பார்த்த உடனேயே டீக்கடையின் உணர்வை அளிக்கும், ஒரு அசல் டீக்கடையை போலவே, கூரை வேயப்பட்டு, கண்ணாடி பாட்டில்களில் பிஸ்கட் நிரப்பப்பட்டு, நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் தொங்க விடப்பட்டு, மேடைக்கு வருபவர்கள் அமர மரத்திலான பெஞ்ச் வைக்கப்பட்டு, டீ ஸ்டால் மாஸ்டருடன் பரபரப்பாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. மேலும் விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு பழைய ஞாபகங்களை நினைவுப்படுத்தும் வகையில், பல்லாங்குழி, தமிழ் விடுகதைகள் என பல அம்சங்களுடன் தமிழ் உணவுத்திருவிழா கொண்டாடப்பட்டது. தமிழ் மக்களின் உணர்வுகளுடன், மனதுக்கு நெருக்கமான தொடர்பை உருவாக்கும் வகையில் இந்நிகழ்வு நடைப்பெற்றது.

தமிழர்கள் நல்லொழுக்கத்துடனும் வாழ்வியல் முறைகளுடனும் இணைத்த தங்களது வாழ்க்கையைப் பார்ப்பதில் பெருமை கொள்கிறார்கள், மேலும் அவர்களின் செறிவுமிக்க கலாச்சாரம், ஒருவர் வாழ்க்கையை அதன் சாராம்சத்தை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கான மறுவடிவமாக இருப்பதையும் உணர்ந்திருக்கிறார்கள். இந்த கருத்தை, திருவிழாவில் இடம்பெற்ற உள்ளூர் உணவுப் பொருட்கள், உட்புறச் சூழல், உரையாடல்கள் மூலம் தமிழின் சிறந்த வாழ்வியல் முறையை வெளிப்படுத்தி இருந்தது அனைவரது மனதையும் கவர்ந்தது.

தமிழ் கலாச்சாரம் மற்றும் பெருமையை கொண்டாடும் வகையில் கருத்துவாக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த மாபெரும் உணவுத்திருவிழா குறித்து பேசிய டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளின் சந்தைப்படுத்தல் மற்றும் இந்தியா பிரிவின் துணைத் தலைவர் புனித் தாஸ், “தமிழகத்தின் பிரபலமான தேநீர் ப்ராண்டாக, தமிழ் மக்களின் மனம் கவர்ந்த ’டாடா டீ சக்ரா கோல்ட்’, தமிழ் கலாச்சாரத்தை மிக நன்றாக புரிந்து கொண்டிருக்கிறது. தமிழ் வாழ்வியல் முறையை முழுமையாக்கும் வகையில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தமிழர்களை ஒன்றிணைத்து கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘தமிழ் வாழ்வியல் வழியைக் கொண்டாடுதல்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தமிழ் நாட்டைச் சேர்ந்த பிரபலமான சமையற்கலை நிபுணர் தாமு முன்னிலையில், ’தேநீர் மற்றும் உணவு மீதான அன்பு’ என்ற தளத்தில் பல்வேறு உள்ளூர் கலாச்சாரங்களை ஒன்றோடு ஒன்று இணைக்கும் விதமாக உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here