ஆப்ட்ரானிக்ஸ் மிகப்பெரிய ப்ரீமியம் விற்பனையாளராக முன்னணி வகிக்கும் இந்நிறுவனம் தெற்கு பிராந்தியத்தில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்துகிறது

0
158

சென்னை, 13 பிப்ரவரி 2020: ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய ப்ரீமியம் விற்பனை மையங்களில் ஒன்றாக முன்னிலை வகிக்கும் ஆப்ட்ரானிக்ஸ் [Aptronix, one of Apple’s Largest Premium Reseller (APR)], இன்று தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பரவலாக ஆறு புதிய விற்பனை மையங்களை ஆரம்பித்திருக்கிறது. இதில், சென்னையில் நான்கு விற்பனை மையங்கள் தொடங்கப்பட்டன. கோயம்புத்தூர் மற்றும் கொச்சி ஆகிய இரு இடங்களில் தலா ஒரு புதிய விற்பனை மையமும் தொடங்கப்பட்டுள்ளன. இந்த புதிய ஆப்பிள் ப்ரீமியம் ரீசெல்லர் கடைகளை ஆப்ட்ரானிக்ஸ் நிறுவனர் திரு. சுதிந்தர் சிங் [Mr. Sutinder Singh, Founder, Aptronix] மற்றும் ஆப்ட்ரானிக்ஸ் இயக்குனர் திருமதி மேக்னா சிங் [Ms. Meghna Singh, Director, Aptronix] ஆகியோர் பிற முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் திறந்து வைத்தனர்.

ஆப்ட்ரானிக்ஸ் ப்ரீமியம் ஆப்பிள் விற்பனை மையங்கள், இந்தியாவின் முக்கிய நகரங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஹைதராபாத் (உலகின் மிகப்பெரிய ஏபிஆர் மையங்களில் ஒன்று- one of the world’s largest APR store), விசாகப்பட்டினம், விஜயவாடா, பெங்களூரு, சென்னை, மும்பை (இந்தியாவின் முதல் மற்றும் ஒரே முதன்மை ஆப்பிள் ப்ரீமியம் ரீசெல்லர் மையம்- India’s first & only flagship APR store), ஆப்பிள் ப்ரீமியம் ரீசெல்லர் விற்பனை மையங்களை அடுத்து, தற்போது கோயம்புத்தூர் மற்றும் கொச்சியில் தங்கள் சில்லறை விற்பனை தளத்தை விரிவுபடுத்தியிருக்கிறது. ஆப்ட்ரானிக்ஸின் அனைத்து விற்பனை மையங்களிலும், வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை அளிக்கும் வகையில் அனைத்து ஆப்பிள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற விற்பனையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிப்புரிந்து வருகின்றனர்.

ஆப்பிளின் ப்ரீமியம் ரீசெல்லர் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய இந்தியாவின் மிகப்பெரிய ஆப்பிள் ப்ரீமியம் மறுவிற்பனையாளரான ஆப்ட்ரானிக்ஸ் நிறுவனர் திரு. சுதிந்தர் சிங் [Mr. Sutinder Singh, Founder, Aptronix – India’s largest Apple Premium Reseller ] பேசுகையில், “நாங்கள் மீண்டும் சென்னையில் வந்திருப்பதாலும், புதிதாக நான்கு ஆப்பிள் ப்ரீமியம் ரீசெல்லர் ஸ்டோர்களை தொடங்குவதாலும் உற்சாகமடைகிறோம். அம்பத்தூர் மற்றும் வி.ஆர். மால் [VR Mall]-லில் எங்கள் விற்பனை மையங்கள் மிகப்பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, சென்னைக்கு மீண்டும் மிக உயர்தரத்திலான சிறப்பான சேவைகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சென்னை முழுவதும் பரவலாக செயல்படும் இந்த ஆறு புதிய கடைகளுடன், ஆப்ட்ரானிக்ஸ் சென்னை மற்றும் இந்தியாவில் ஆப்பிளின் மிகப்பெரிய பங்குதாரராக அதிக முக்கியத்துவம் பெறும். ஆப்பிளின் மிகப்பெரிய ப்ரீமியம் விற்பனை பங்குதாரராக [largest premium reseller partner of Apple], நாங்கள் எங்கள் வளர்ச்சித் திட்டங்களில் உறுதியாக இருக்கிறோம். இதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் உள்ள நகரங்கள் முழுவதும் எங்களது வலுவான செயல்பாடுகளை சீராக விரிவுபடுத்தி வருகிறோம்.’’ என்றார்.

புதிய விற்பனை மையங்களின் அறிமுகம் குறித்து இந்தியாவின் மிகப்பெரிய ஆப்பிள் ப்ரீமியம் விற்பனையாளரான ஆப்ட்ரானிக்ஸின் இயக்குநர் திருமதி மேக்னா சிங் [Ms. Meghna Singh, Director, Aptronix – India’s largest Apple Premium Reseller] கூறுகையில், “ஆப்ட்ரானிக்ஸை, இந்தியாவின் மிகச்சிறந்த மற்றும் முன்னணி ஆப்பிள் ரீசெல்லர் ப்ராண்டாக மாற்றுவதே எங்களது முக்கிய நோக்கமாகும். எங்கள் வாடிக்கையாளர்களின் மாறுபட்ட ஆப்பிள் தயாரிப்புத் தேவைகளை, விரைவாகவும் நிறைவாகவும் பூர்த்தி செய்வதன் மூலம் அவர்களின் அனைத்து தேவைகளுக்கும் எளிதாக அணுகும் வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறோம். எங்களது ப்ரீமியம் சென்டர்கள், நாடு முழுவதும் சில்லறை வர்த்தகம் மற்றும் சேவை செயல்பாடுகளை ஊக்குவிப்பதோடு, வலுப்படுத்தவும் உதவுகின்றன. ஆப்பிள் போன்ற உலகின் மிகப்பெரிய ப்ரீமியம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ப்ராண்ட் உடனான எங்கள் கூட்டு செயல்பாடுகளை நாங்கள் மிகவும் மதிக்கிறோம், மேலும் 8 ஆண்டுகளாக இந்த ப்ராண்ட்டுடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நிலையான வளர்ச்சி, தொழில்நுட்ப ரீதியான மேம்பாடு, பரவலான செயல்பாடுகள் ஆகியவற்றின் மூலம் எங்களது ஆப்பிள் வாடிக்கையாளர்களை, சிறப்பான சேவைகளைப் பெற மீண்டும் எங்களையே தேடி வரும் வகையில் அருமையான ஆப்பிள் அனுபவத்தை வழங்குவதே எங்கள் முக்கிய நோக்கமாகும்.’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here