விக்ரம் சோலார் நிறுவனம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் அனுபவமுள்ள சாய்பாபா உட்டுகுரி தலைமை நிர்வாக இயக்குனராக (CEO) நியமித்துள்ளது

0
97

கியானேஷ் சௌதரி மேலாண் இயக்குனராக (MD) தொடர்ந்து செயல்பட்டு பன்முகப்படுத்துதல், புதிய தொழில்கள், முக்கிய அறிவார்ந்த முன்னெடுப்புகள் ஆகியவற்றை கவனிப்பார்

கொல்கத்தா, பிப்ரவரி 12, 2020: ‘விக்ரம் சோலார்’, இந்தியாவின் முன்னணி சோலார் மாடியூல் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகவும், EPC & ரூஃப்டாப் (சூரியக் கூரை) சோலார் தயாரிப்புகளை வழங்கும் நிறுவனமாகவும் திகழ்கிறது. இந்நிறுவனம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் அதிக அனுபவமுள்ள திரு. சாய்பாபா உட்டுகுரி அவர்களை அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனராக (CEO) நியமித்துள்ளது. இந்த அறிவிப்பானது, விக்ரம் சோலார் நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியின் ஒரு முக்கிய முடிவாக கருதப்படுகிறது.

நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக (MD) திரு கியானேஷ் சௌதரி அவர்கள் தொடர்ந்து நீடிப்பார். திரு உட்டுகுரி அவர்களின் நியமனத்தைத் தொடர்ந்து, திரு சௌதரி அவர்கள் போர்ட்ஃபோலியோ பன்முகபடுத்துதல் / முக்கிய அறிவார்ந்த முன்னெடுப்புகள் மற்றும் எதிர்கால தொழில்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு வியூகம் வழங்கும் பணியை மேற்கொள்வார்.

திரு உட்டுகுரி அவர்கள், கோபன்ஹேகன் பிஸ்னஸ் ஸ்கூலில் சர்வதேச தொழில் மேலாண்மையில் (MBA) முதுகலை பட்டம் பெற்றவர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், காற்றாலை மற்றும் சூரிய ஆற்றல் தொழிற்துறையில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை பெற்றுள்ளார். மும்பை பங்குச்சந்தையில் (BSE) பட்டியலிடப்பட்ட நிறுவனமான ஐனாக்ஸ் வின்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் பன்முகப்படுத்துதல் பிரிவின் CEO-வாக பணியாற்றியுள்ளார். அதற்கு முன்பு திரு உட்டுகுரி அவர்கள் பல்வேறு நிறுவனங்களில் இந்திய அளவில் (கிழக்கு மற்றும் தெற்கு) தொழில் தலைவர் / தலைமை நிர்வாகியாக பணிபுரிந்திருக்கிறார். மேலும், சுஸ்லான் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திலும் தலைமைப் பொறுப்பில் பணிபுரிந்துள்ளார்.

திரு உட்டுகுரி அவர்களின் நியமனம் குறித்து பேசிய விக்ரம் சோலார் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர், திரு. கியானேஷ் சௌதரி அவர்கள் கூறியதாவது, “சாய் அவர்களின் அறிவும், அனுபவமும் விக்ரம் சோலார் நிறுவனத்திற்கு ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷமாக அமையும். சோலார் உற்பத்தி, நிறுவன அலுவல்கள் மற்றும் சர்வதேச சந்தைகள் ஆகியவற்றில் அவர் கொண்ட அனுபவம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் நாம் வகிக்கும் முன்னிலைக்கு மேலும் வலு சேர்க்கும். இந்த ஆண்டின் முதல் பாதியில் பொறுப்புகளை அவருக்கு அளிக்கும் செயல்முறையில் நான் சாய் அவர்களுக்கு உதவியாக இருந்து, நமது உள் மற்றும் வெளிப் பங்குதாரர்கள் அனைவருக்கும் ஒரு நல்ல அனுபவம் கிடைப்பதை உறுதி செய்வேன்.”

விக்ரம் சோலார் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்ட திரு சாய்பாபா உட்டுகுரி அவர்கள் பேசுகையில், “தொழிலிற்கு அற்புதமான இந்த நேரத்தில் விக்ரம் சோலார் நிறுவனத்தில் நான் CEO-வாக சேர்ந்துள்ளது குறித்து நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இது சிறந்த செயல்திறன் மற்றும் புதுமையான தயாரிப்புகளை உருவாக்குவதிலும் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு அற்புதமான நிறுவனமாகும். எதிர்வரும் ஆண்டுகளில் மிகத்திறமையான முன்னோடிகளைக் கொண்ட குழுவுடன் பணியாற்றி, விக்ரம் சோலார் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து செயலாற்ற நான் ஆர்வமாக உள்ளேன்”, என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், “விக்ரம் சோலார் நிறுவனத்தில் நாம் நமது அடிப்படை கொள்கைகளுக்கு உண்மையாக இருந்து, இந்த பிரிவில் தொடர்ந்து சிறந்த பொருட்களை வழங்கி நமது வாடிக்கையாளர்களை மகிழ்வித்து, நமது ஊழியர்கள் செய்யும் பணி குறித்து அவர்களை பெருமையடைய செய்ய வேண்டும்”, என்று கூறினார்.

திரு கியானேஷ் சௌதரி அவர்களின் தலைமையின் கீழ் விக்ரம் சோலார் நிறுவனம், கடந்த 14 ஆண்டுகளின் இந்தியாவின் மிகப்பெரிய சோலார் மாடியூல் உற்பத்தியாளர்களுள் ஒன்றாக உருவானது. விக்ரம் சோலார் நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக தொடரவிருக்கும் அவர், எதிர்கால தொழில் விரிவாக்கம், புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களான முதலீடுகள் மற்றும் ‘முக்கிய முதலீட்டு செலவுகள் குறித்த முடிவுகள்’ ஆகிய முக்கியத் தொழில் பிரிவுகளை கவனிப்பார்.

விக்ரம் சோலார் லிமிடெட்: விக்ரம் சோலார் லிமிடெட் (முன்பு விக்ரம் சோலார் பிரைவேட் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது) நிறுவனம் சோலார் எனர்ஜி தீர்வுகள், செயல்திறன் மிக்க PV மாடியூல் உற்பத்தி மற்றும் முழுமையான EPC தீர்வுகளை வழங்கி வரும் ஒரு முன்னணி நிறுவனமாகும். ஆறு கண்டங்களில் சர்வதேச அளவில் இயங்கி வரும் இந்த நிறுவனம், அந்தந்த கண்டங்களில் சூரிய ஆற்றலின் மூலம் ஒரு புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. விக்ரம் குழுமம் தன் விரிவான உற்பத்தி அனுபவத்துடன்; அதன் நாற்பது ஆண்டுகால வெற்றியை, 2006-ஆம் ஆண்டு முதல் விக்ரம் சோலார் நிறுவனத்தின் மூலம் தொடர்கிறது.

விக்ரம் சோலாரின் வருடாந்திர PV மாடியூல் உற்பத்தித்திறன் 1.1 GW என்ற நிலையில் உள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் தரம், நம்பகத்தன்மை மற்றும் செயல்பாடு ஆகியவற்றில் சர்வதேச தரத்தில் உள்ளன. முழுமையாக எதிர்கால தேவைகளை ஒருங்கிணைத்த சோலார் EPC தீர்வுகளை வழங்கும் நிறுவனமான விக்ரம் சோலார், உலகத் தரத்திலான தொழில்நுட்பத்தினை தனது வடிவமைப்பு, நிறுவுதல் மற்றும் சோலார் திட்டங்களை உலகெங்கும் செயல்படுத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here