டெல்டா மாவட்டங்கள் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பு! முதலமைச்சருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டு

0
114

டெல்டா மாவட்டங்கள் ஒருங்கிணைந்த வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்படுமென்றும் அதற்காக சட்டம் கொண்டுவரப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். முதலமைச்சரைப் பாராட்டுகிறோம்.

இது அறிவிப்பாக மட்டும் நின்றுவிடாமல் எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதற்கான சட்டத்தை நிறைவேற்றவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். கடலூரில் அமைக்கப்படவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை சுற்றுச்சூழலுக்கும் மீனவர்களுக்கும் பாதிப்பில்லாத வகையில் நிறைவேற்றவேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

பிப்ரவரி 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் தமிழக அரசின் பட்ஜெட் விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் நன்மை பயப்பதாக இருக்கவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முதல்வர் எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here