வில்லேஜ் டிக்கெட் 2020

0
111

விலேஜ் டிக்கெட் என்பது நமது சிறப்பு வாய்ந்த பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கு பெருமளவில் உதவும் கிராம வாழ்க்கையின் முப்பெரும் தூண்களான விவசாயிகள், கைவினைஞர்கள் மற்றும் சமையல்காரர்கள் ஆகியோரை பிரத்யேகமாகப் பெருமைப்படுத்தும் வகையில் கிராண்ட் கேடரிங் கம்பெனியின் இணைந்து பிராண்ட் அவதார் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு திருவிழாவாகும். இச்சிறப்பு விழாவின் 3 ஆம் நிகழ்வான விலேஜ் டிக்கெட் 2020 தலைமை விருந்தினராக தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத்துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் மற்றும் சிறப்பு கௌரவ விருந்தினர் அனிருத் ரவிசந்தர் ஆகியோர் முன்னிலையில் 6 பிப்ரவரி அன்று காலை 11.00 மணியளவில் நந்தனம் ஒய்எம்சிஏ வில் வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. முதல் 2 நிகழ்வுகளின் வெற்றியைத் தொடர்ந்து பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 9 வரை காலை 11.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடத்தப்படும் விலேஜ் டிக்கெட்டின் மூன்றாம் நிகழ்வு தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் செழித்து வளர்ந்து வரும் மக்களின் வரவேற்பைப் பெற்ற பல்வேறு கலை வடிவங்கள், கலாச்சாரம், உணவு மற்றும் உணர்ச்சிகளை உயிர்ப்பிக்கிறது. சென்னையில் கிராமிய வடிவமைப்பும் இந்த வெற்றிகர நிகழ்வில் அமைக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு நிகழ்வுகளில் இளைஞர்கள் மற்றும் சிறியவர்கள், பெரியவர்கள் குடும்பத்தோடு பெருமளவில் வந்திருந்தனர். குழந்தைகள் பெற்றோரின் இளமைப் பருவத்தை நினைவு கூரும் வகையிலும், பெற்றோர் குடும்பத்துடன் பங்கேற்று மகிழும் வகையிலும், பெருநிறுவனங்கள் தங்கள் குழுக்களுடன் வந்திருந்து பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்கும் வகையிலும், உணவு மற்றும் பொழுதுபோக்குகளைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் பங்கேற்கும் வகையிலும் ஏற்பாடு செய்யபட்டுள்ள இந்த நிகழ்வு அனைவருக்குமானதாகும்.

மேலும், இந்நிகழ்வில் அமைக்கப்பட்டிருந்த கடைகள் மற்றும் விவசாயப் பரப்பைச் சுற்றிப்பார்த்த தலைமை விருந்தினரும் சிறப்பு கௌரவ விருந்தினரும் இதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஏற்றங்கள் மற்றும் விளையாட்டுகளின் முதல் அனுபவத்தைப் பெற்று மகிழ்ந்தனர்.

தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத்துறை அமைச்சர் கே. பாண்டியராஜன், பேசுகையில் நகர மக்கள், கிராமிய வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு அரிய வாய்ப்பாக அமைந்திருக்கும் விலேஜ் டிக்கெட்டின் ஏற்பாட்டாளர்களையும் இந்த நிகழ்வை அமைப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பையும் பாராட்டினார். மக்களின் பெருமளவு ஆதரவு இல்லாத காரணத்தால் உன்மையிலேயே ஆபத்தில் இருந்து வரும், காலங்காலமாக போற்றப்படும் கலாச்சாரத்தை பெருமைப்படுத்த உதவும் வகையிலும் பல்வேறு கலை வடிவங்களை பாதுகாக்கும் வகையிலும் அமைந்துள்ளது என்று கூறினார். இந்நிகழ்வு மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.

இசையமைப்பாளர் மற்றும் பாடகரான ராக்ஸ்டார் அனிருத் ரவிசந்தர் கிராமத்து கலாச்சாரத்தை நகரத்திற்கு கொண்டுவருவதில் ஏற்பாட்டாளர்களின் முயற்சிகளை பாராட்டினார். இந்த நிகழ்வு, கிராமப்புற நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளின் திறனாளர்களை சென்னை மக்கள் கண்டு களிக்கும் வகையில் ஒரு வாய்ப்பாக அமைந்தது என்று தெரிவித்தார். தமிழ் சினிமாவில் நாட்டுப்புற இசையின் பங்கேற்பைப் பற்றியும் அவர் பேசினார். இன்று நாம் இந்தளவிற்கு வாழ்வதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கும் கிராமத்தின் 3 பெரிய தூண்களைப் போற்றும் இது போன்ற நிகழ்வுகளை பெருமளவில் ஆதரிக்கும்படி சென்னை மக்களை கேட்டுக்கொண்டார்.

பிராண்ட் அவதாரின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹேமசந்திரன், “முதல் மற்றும் இரண்டாம் நிகழ்வுகளில் சுமார் 60,000 த்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்தது அற்புதமான அனுபவமாகவும் ஊக்கமளிப்பதாகவும் உள்ளது. இது சென்னை மக்களுக்கு ஒரு உடனடி வெற்றியாக அமைந்ததால் இந்நிகழ்வை ஒரு வாழ்நாள் அனுபவமாக இருக்கும் வகையில் ஏற்பாடு செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த மூன்றாம் நிகழ்வு முன்பை விட சிறப்பான முறையில் அனைத்து வயதினருக்கும் ஒரு நெகிழ்வான அனுபவத்தை உண்டாக்கும் வகையில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

கிராண்ட் கேடரிங் கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. திலக், “முன்பு இருமுறை நடந்த விலேஜ் டிக்கெட்டின் நிகழ்வுகளுக்கு சென்னை மக்கள் வருகை தந்து மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்வில், அனைவருக்கும் மறக்க முடியாத நினைவுகளை ஏற்படுத்தும் வகையில் கிராமப்புற அனுபவத்தை அளிக்கும் ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. முந்தைய இரண்டு நிகழ்வுகளை விட இந்த நிகழ்வில் பற்பல விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு செயல்பாடுகளை ஏற்பாடு செய்துள்ளதால் மாபெரும் நிகழ்வாகத் திகழும். ” என்று கூறினார்.

விலேஜ் டிக்கெட் 2020 நிகழ்வின் சிறப்பம்சங்கள்
1. தமிழ்நாட்டின் 28+ மாவட்டங்களிலிருந்து உணவு சுமார் 34 க்கும் மேற்பட்ட கடைகளில் சூடாகவும் சுவையாகவும் மதிய உணவு மற்றும் இரவு விருந்தில் 28+ க்கும் மேற்பட்ட உணவு வகைகள் உடனடியாக செய்துத் தரும் வகையில் சிறப்பம்சமாக இரண்டு விருந்துகள் சைவ மொய் விருந்து மற்றும் அசைவ மொய் விருந்து
2. விளையாட்டுகள் – இராட்சத சக்கரம், உறியடித்தல், எழவாட்டுக்கல்லு, பரமபதம், கில்லி, பல்லாங்குழி மற்றும் எல்லா வயதினருக்குமான 19 விதமான விளையாட்டுகள்
3. விவசாயம் – நேரடியாக செய்து பார்த்து ஒரு விவசாயிக்குண்டான அனைத்து செயற்பாடுகளையும் முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையில், உழவு செய்யும் அனுபவம்
4. காலை அரங்கம் – பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கிடையிலான தமிழ் நாட்டின் பல்வேறு கலை வடிவங்களின் போட்டிகள் (காலை 10.00 முதல் 4.00 மணி வரை)
5. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த கலைஞர்கள் மூலம் தமிழ்நாட்டின் போற்றப்படும் கலை மற்றும் கலாச்சார நடனங்களான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம், நெருப்பு தீப்பந்தாட்டம் மற்றும் இது போன்ற பல்வகை நடனங்கள்
7. திருவிழா தேர் – மாபெரும் இரதம்
8. கால்நடை காட்சி – ஜல்லிக்கட்டு காளை, மஞ்சு விரட்டு காளை, சேவல், கடா
9. பாரம்பரிய சவாரி – மாட்டு வண்டி, குதிரை வண்டி மற்றும் சைக்கிள் ரிக்ஷா
10. மற்ற நிகழ்ச்சிகள் – 12 ஆதாரபூர்வமான கிராமத்து மாதிரி வீடுகள், மண்பாண்டம் & ஊர்வலம்

விலேஜ் டிக்கெட் 2020 ற்கான புதிய சேர்த்தல்கள்
மேற்கூறிய செயற்பாடுகளைத் தவிர, விலேஜ் டிக்கெட் 2020 ற்கான மேலும் சில அற்புதமான புதிய சேர்த்தல்கள்
1. தொல்பாவை கூத்து (பொம்மலாட்ட நிகழ்ச்சி)
2. மாபெரும் இராட்சத சக்கரம்
3. ஞானசம்பந்தம் அவர்களின் பட்டிமன்றம்
4. தமிழ் கிராமிய விருதுகள்

ரம்
1. காலை அரங்கம் – மாலை 4.00 மணி – இரவு 10.00 மணி
2. உணவு – காலை 11.00 மணி – 10.00 மணி, விருந்து(மதிய உணவு) மதியம் 12.00 –மாலை 3.00 மணி விருந்து (இரவு விருந்து) இரவு 7.00 – 10.00 மணி
3. கலாச்சார கலை வடிவங்கள், விளையாட்டுகள் மற்றும் பிற அனுபவங்கள் மற்றும் செயல்பாடுகள் – மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை

1. நுழைவுக் கட்டணம் ரூ. 200
2. 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச நுழைவு
3. சூப்பர் சேவர் ரூ. 500 (நுழைவு டிக்கெட் மற்றும் உணவுக் கடைகளில் மாற்றிக்கொள்ளத்தக்க ரூ. 350/- மதிப்பிலான உணவு கூப்பன்கள்.
4. அசைவ உணவு மொய் விருந்து டிக்கெட் ரூ. 1500 & குழந்தைகளுக்கு (6-12) – ரூ. 500
சைவ விருந்து மொய் விருந்து டிக்கெட் ரூ. 1200 & குழந்தைகளுக்கு (6-12) – ரூ. 500

டிக்கெட் வாங்குவதற்கான இணையதளம் : www.villageticket.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here