ஹெலோ பயன்பாட்டாளர்கள், 2019-ம் ஆண்டில் உருவாக்கி, பகிர்ந்து, பின்தொடர்ந்த மிகச் சிறந்த முதன்மையான 5 உள்ளடக்க கருப்பொருள்களை ஹெலோ வெளிப்படுத்தியுள்ளது!

0
92

சென்னை, ஜனவரி 1, 2020:- இந்தியாவின் முன்னணி பிராந்திய மொழி, சமூக ஊடக தளமான ஹெலோ 2019-ம் ஆண்டின் ‘சிறந்த 5 உள்ளடக்கக் கருப்பொருள்களை’ வெளியிட்டுள்ளது. இவை மக்களை ஒன்றிணைத்து, இந்த ஆண்டு இந்தத் ஹெலோ தளத்தில் அதிகபட்ச ஈடுபாட்டை ஏற்படுத்தியது. ஹெலோவில் உள்ள பரந்து விரிந்த பயன்பாட்டாளர்கள், தங்கள் ஆண்டு இறுதி தருணங்களையும் புதிய ஆண்டு பிறப்பையும் கொண்டாடும் வகையிலும் அவர்களை ஊக்குவித்து மகிழ்விக்கும் வகையிலும், இந்த தளம் (மகிழ்ச்சியான புத்தாண்டு 2020) #HappyNewYear2020 என்ற இயக்கத்தையும் தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டு ஹெலோவுக்கான முதல் 5 உள்ளடக்க கருப்பொருள்கள் பொழுதுபோக்கு, சந்தர்ப்பங்கள், சமூக நலன் (ஹெலோ கேர்), திறமை தேடல் மற்றும் பயணம் ஆகியவை ஆகும். ஏனெனில் அவை ஹெலோ தளத்தில் பல்வேறு பிரபலமான இயக்கங்களைக் கொண்டிருந்தன. அவை இந்தியாவில் ஹெலோ பயன்பாட்டாளர்களின் மாறுபட்ட சமூகத்தை 2019–ம் ஆண்டில் ஒன்றிணைத்தது. அவற்றில் உள்ளடக்கங்கள் உருவாக்கப்பட்டு, பகிர்ந்து கொள்ளப்பட்டு மற்றும் பின்பற்றப்பட்டன. 14 பிராந்திய மொழிகளிலும் கோடிக்கணக்கான மக்கள் ஹெலோவின் அளவில்லாத பொழுதுபோக்குகளில் பங்கேற்று வருகின்றனர். பல்வேறு சந்தர்ப்பங்களை ஒன்றாக இணைந்து கொண்டாடியும் வருகின்றனர். அவர்களின் தனித்துவமான திறன்களையும் திறமையையும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஹெலோ தளத்தின் இயக்கங்களில் தீவிரமாக பங்கேற்பதன் மூலம் சமூகத்தின் நலனுக்காக பங்களிப்பையும் வழங்கியும் வருகின்றனர். இவற்றின் மூலம் ஹெலோ நாட்டின் முன்னணி சமூக ஊடக தளமாக உருவெடுத்துள்ளது.

ஹெலோ தளம் பிராந்திய மொழி பொழுதுபோக்கின் மையமாகத் திகழ்ந்து வருகிறது. 2019-ம் ஆண்டில், இந்தத் தளம் தனது பயனர்களுக்கு அளவற்ற பொழுதுபோக்கு விருப்பங்களை வழங்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தி செயல்பட்டுள்ளது. பிக்பாஸ் (இந்தி), காமெடி கிலடிகலு (கன்னடம்), மகாராஷ்டிராவின் சா ஃபேவரைட் கவுன் (மராத்தி), ஸ்டார்ட் மியூசிக் ஆராத்யம் பாதம் (மலையாளம்) போன்ற பல பிரபலமான, பிராந்திய பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடன் ஹெலோ இணைந்து செயல்பட்டது. அதன் மூலம் பிடித்த நட்சத்திரங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுடன் எளிதில் தொடர்பு கொண்டு அணுகலை ஏற்படுத்திக் கொள்ள அதன் பயனர்களுக்கு ஹெலோ சிறந்த வாய்ப்பை வழங்கியது. பல பாலிவுட் பிரபலங்களான சயீஃப் அலி கான், அர்ஜுன் கபூர், நவாசுதீன் சித்திக் போன்றவர்கள் தங்கள் படங்களை ஹெலோவின் முதன்மை ஆன்லைன் நிகழ்ச்சியான #FridayFever (வெள்ளிக் கிழமை காய்ச்சல் – ஃபிரைடே ஃபீவர்) மூலம் விளம்பரப்படுத்த தளம் அமைத்துக் கொண்டனர். டைகர் ஷிராஃப், மகேஷ் பாபு, ஷ்ரத்தா கபூர் மற்றும் பலர் ஹெலோ தளத்தில் இணைந்து தங்களின் தனிப்பட்ட கணக்குள் மூலம் தங்களின் ரசிகர்களுடன் தொடர்பு கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here