குயிக் ரைய்ட் தளம் சென்னையில் அதன் தளத்தில் 2.7 லட்சம் புதிய பயனர்களை பதிவு செய்துள்ளது!

0
108

சென்னை, ஜனவரி 2, 2020:-  குயிக் ரைய்ட் சென்னையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது, 2019-ம் ஆண்டில் 276000-க்கும் மேற்பட்ட பயனர்கள் அதன் தளத்தில் பதிவு செய்துள்ளனர். பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட தொடக்க நிலை தொழில் நுட்ப நிறுவனமாக 2015-ம் ஆண்டு சந்தையில் அறிமுகம் ஆனது. .   3 இந்த ஆண்டு  மடங்கு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஒட்டு மொத்தமாக பதிவுசெய்துள்ள  பயனர் எண்ணிக்கை 3.2 மில்லியனைத் .[3 கோடியே 20 லட்சம் பயனர்கள்] தொட்டிருக்கிறது

இதே  கால கட்டத்தில், 2018-ம் ஆண்டுடன்  ஒப்பிடும்போது  சென்னையில் கார் பகிர்வு (carpools) சவாரிகளின் எண்ணிக்கையில்  80%  வளர்ச்சியை  குயிக்  ரைய்ட் பெற்றுள்ளது. சென்னையில் உள்ள குயிக் ரைய்ட் பயனர்கள் தங்கள் சக கார்-பகிர்வாளர்களுடன் சவாரிகளைப் பகிர்ந்துள்ளனர். வாகனங்களைப் பகிர்வதன் மூலம் 2019-ம் ஆண்டில் 7800 டன் கார்பன் வெளியேற்றத்தை அவர்கள் தடுத்துள்ளனர். நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் சென்னை பயனர்கள் 33,00,000 சவாரிகளை நகரத்தில் உள்ள சக கார் பயணப் பகிர்வாளர்களுடன் வெற்றிகரமாக பகிர்ந்துள்ளனர். சென்னை பயனர்கள் 2019-ம் ஆண்டில் கார் பூலிங் (கார் பயணப் பகிர்வு) மூலம் 700000 கிலோமீட்டர் தூரப் பயணத்தைப் பகிர்ந்துள்ளனர்.

போக்குவரத்து  நெரிசல்  மற்றும்  வாகனப் புகை  மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள  பெருநகரங்களில்  கார்-பூலிங் எனப்படும் கார் பகிர்வு சவாரி உத்தி  அதிக வரவேற்பைப் பெற்று பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்காலத்தில் கார்பூலிங் எனப்படும் கார் பயணப் பகிர்வு நடைமுறையானது முதன்மையான நிலைக்கு வந்துள்ளது. ஏனெனில் இது மலிவான பயணத்தை வழங்குவதுடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பங்காற்றுகிறது.  குயிக் ரைய்ட் செயலியைப் பயன்படுத்தும் பயனர்கள், கார்பன் வெளியீட்டு உமிழ்வைக் குறைப்பதில் அவர்களின் பங்களிப்பை மதிப்பீடு செய்து பகுப்பாய்வு செய்ய முடியும்.

கடந்த ஒரு ஆண்டில் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து குயிக் ரைய்டின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கே.என்.எம்.ராவ் (KNM Rao, Co-founder and CEO of Quick Ride) கூறுகையில், “பல்வேறு நகரங்களில் உள்ள பயணிகள் இப்போது தினசரி பணிக்குச் செல்ல கார் பூல் கார் பயணப் பகிர்வு செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாட்டில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை மக்கள் உணர்ந்து அங்கீகரித்துள்ளனர். கடந்த ஒரு வருடத்தில் மனசாட்சியுள்ள குடிமக்கள், தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை விலக்கி தங்கள் நுகர்வு முறைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளனர். இது பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனுபவத்தை மென்மையாகவும், தொந்தரவில்லாமலும் செய்ய தொழில்நுட்பம் உதவியுள்ளது. இது அதன் பிரபலத்திற்கு பெரிதும் உதவி செய்துள்ளது. ஒவ்வொரு நாளும் சாலைகளில் இருந்து ஒரு மில்லியன் (10 லட்சம்) கார்களைக் குறைப்பதும், 2020-ம் ஆண்டு இறுதிக்குள் ஒவ்வொரு நாளும் குறைந்தது 3000 டன் கார்பன் வெளியேற்றத்தைத் தடுப்பதும் எங்கள் குறிக்கோள்களாக உள்ளன. எங்கள் பயனர்களின் ஆதரவுடன், இந்தியாவில் வளர்ந்து வரும் அனைத்து நகரங்களிலும் நாங்கள் தொடர்ந்து விரிவாக்கத்தை மேற்கொள்வோம்.  மேலும் கார்-பூலிங் எனப்படும் கார் பகிர்வுப் பயண நடைமுறையை ஒரு முக்கிய போக்குவரத்து முறையாக மாற்றுவதற்கு பிரச்சாரம் செய்வோம்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here