பாண்டியன் ஸ்டோர்ஸ் வெற்றிகொண்டாட்டம் ஞாயிறு மதியம் 2.30 மணிக்கு விஜய் டிவியில்

0
58

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா தொடர் நேயர்களிடையே
மிகுந்த வரவேற்பு பெற்று வரும் தொடர் என்பது நமக்கு தெரிந்த விஷயம். பாண்டியன்
ஸ்டோர்ஸ் குடும்பம் ஒன்றாக இணைத்து ஒரு திருவிழா கொண்டாடிவிட்டனர் சமீபத்தில். தாவது இந்த நட்சத்திரங்கள் அனைவரும் இனைந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் வெற்றிக்
கொண்டாட்டம் என்ற ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியை ஆடல் பாடல் என்று கலக்கிவிட்டனர். முக்கியமாக கதிர் முல்லை சேர்ந்து நடனம் ஆடியுள்ளார். இதைத்தவிர தனம், மூர்த்தி, மீனா, ஜீவா, கண்ணன் என்று மொத்தம் குடும்பமும் பங்கேற்கும் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் இதில் இடம்பெற உள்ளது.

மேலும் திருநெல்வேலிவ்யில் இருந்து ஒரே கூட்டுக் குடும்பத்தை சேர்த்தவர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் போலவே தங்கள் குடும்பமும் அண்ணன் தம்பிகள் அண்ணி ஓரகத்தி என்று சேர்த்து வாழும் ஒரு குடும்பம் இந்த மெகா தொடர் குடும்பத்தை சந்திக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் ஞாயிறு மதியம் 2.30 மணிமுதல் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் வெற்றிக்கு
கொண்டாட்டம் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது காணாதவறாதீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here