ஐசிஐசிஐ ப்ரூ ஐப்ரொடெக்ட் ஸ்மார்ட் இப்போது பே டிஎம்-மி ல் கிடைக்கிறது!

0
171

சென்னை, டிசம்பர் 24, 2019:- ஐ.சி.ஐ.சி.ஐ ப்ருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், அதன் பாதுகாப்பு காப்பீட்டு அம்சமான ஐ.சி.ஐ.சி.ஐ ப்ரு ஐபுரொடெக்ட் ஸ்மார்ட் பாலிசியின் விநியோகத்திற்காக ‘பே டிஎம்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய மொபைல் கட்டண சேவை வழங்கும் நிறுவனமாக ‘பே டிஎம்’ (Paytm) உள்ளது.

‘பே டிஎம்’ (Paytm) பயன்பாட்டில் ஐசிஐசிஐ ப்ருடெண்ஷியல்-லின் (ICICI Prudential) முதன்மை பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டத்தை வழங்க இரு நிறுவனங்களும் தங்கள் டிஜிட்டல் தளங்களை ஒருங்கிணைத்துள்ளன. ‘பே டிஎம்’-ல் ஏற்கனவே தங்கள் கேஒய்சி – வாடிக்கையாளர் விவரங்களைத் தெரிந்து கொள்ளல் (know your customer-KYC) அங்கீகாரத்தை நிறைவு செய்த பயனர்கள், காகிதமில்லாத அனுபவத்தைப் பயன்படுத்தி, சில நிமிடங்களில் ஐசிஐசிஐ ப்ருடெண்ஷியல் நிறுவனத்தின் ஐ.சி.ஐ.சி.ஐ ப்ரு ஐபுரொடெக்ட் ஸ்மார்ட் பாலிசியை மொபைல் செயலி மூலம் வாங்கலாம்.

ஐ.சி.ஐ.சி.ஐ ப்ருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் புனீத் நந்தா (Deputy Managing Director, ICICI Prudential Life Insurance) கூறுகையில், “நாட்டின் மிகப்பெரிய மொபைல் கட்டண தீர்வுகள் வழங்கும் நிறுவனமான ‘பே டிஎம்’ (Paytm) உடன் கூட்டுசேர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு செயல்படும் இரண்டு அமைப்புகளின் ஒருங்கிணைப்பு இதுவாகும். எந்தவொரு வாடிக்கையாளரின் போர்ட்ஃபோலியோவிலும் (ஒதுக்கீடு) கால அளவுக் காப்பீடு (டெர்ம் இன்சூரன்ஸ்) என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இந்த பிணைப்பு பேடிஎம் பயனர்களுக்கு ஆயுள் காப்பீட்டை விரைவாக வாங்குவதற்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு நிதி பாதுகாப்பை வழங்கும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கும் ஒரு வசதியான வழியை ஏற்படுத்தித் தருகிறது. ஆயுள் காப்பீட்டை வாங்குவதற்கு எளிதான அணுகலை வழங்க தொழில்நுட்பத்தை நாங்கள் தொடர்ந்து பயன்படுத்துவோம். இன்றைய வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் விரும்பிகளாக உள்ளனர். இந்த இரண்டு நிறுவனங்களின் கூட்டு செயல்பாடானது, பரிவர்த்தனை செய்வதற்கு வாடிக்கையாளர்கள் விரும்பும் தளத்தை அமைத்துக் கொடுக்க வகை செய்துள்ளது.” என்றார்.

‘பே டிஎம்’ நிறுவனத்தின் தலைவர் அமித் நய்யர் (Amit Nayyar, President – Paytm) கூறுகையில், “பேடிஎம்-மில், அனைத்து இந்தியர்களையும் டிஜிட்டல் முறையில் வசதியாகவும் பாதுகாப்பான முறையிலும் பரிவர்த்தனை செய்ய வைக்க நாங்கள் அயராது உழைக்கிறோம். எங்கள் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு புதுமையான மற்றும் தனித்துவமான காப்பீட்டுத் தீர்வுகளையும் வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். பாலிசிகளை வாங்குவதில் இருந்து உரிமை கோரல் வரை தடையற்ற பயணத்தை வழங்க நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். ஐ.சி.ஐ.சி.ஐ ப்ருடென்ஷியல் லைஃப் நிறுவனத்துடன் தற்போது இணைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இதன் மூலம் பேடிஎம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், பேடிஎம் வசதியுடன், கூடுதலாக அவர்களது தேவைக்கேற்ப ஒரு காப்பீடுப் பாலிசியைத் தேர்வு செய்ய இயலும்” என்றார்.

பேடிஎம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய நிதிச் சேவை தளமாகும். இது பணம் செலுத்துதல், வர்த்தகம், வங்கி, கடன் வழங்கல் மற்றும் காப்பீட்டு சேவைகளை வழங்குகிறது. ’பே டிஎம்’-ல் 400 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்கள் பல்வேறு தினசரி பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு இந்தத் தளத்தை பயன்படுத்துகின்றனர். நாடு முழுவதும் 14 மில்லியன் வணிகர்களால் பேடிஎம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பேடிஎம்- ஐ விஜய் சேகர் சர்மா தொடங்கினார். இது இந்தியாவின் தேசிய தலைநகர்ப் பகுதியான டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here