பொன் வித்யாஷ்ரம் பள்ளியின் வளசரவாக்கம் கிளை தனது 13ஆவது விளையாட்டு விழா இரண்டு நாட்கள் கொண்டாடியது

0
59

முதல்நாள் 19.12.19 வியாழக்கிழமை 1 முதல் 5
வகுப்புகளுக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கான
பரிசளிப்பு, கலைநிகழ்வுகள் யாவும் நடைபெற்றன. காவல்
துறை இணை கமிஷனர் ACP ஜெ. ஜெயகரன்
அவர்களும், விளையாட்டுத் துறையில் முத்திரை பதித்த
வீராங்கனை செல்வி விலாசினி ஆகிய இருவரும்
தலைமை மற்றும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து
கொண்டனர். ஜல்லிக்கட்டு முதலான பாரம்பரிய மிக்க
நாட்டுப்புறக் கலைநிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன
தலைமை விருந்தினரது பாராட்டுக்களோடு விழா இனிதே
நிறைவுற்றது.

இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (20.12.2019) 6
முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கட்கான
விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவின் தலைமை
விருந்தினாராக IPS அதிகாரி சைலேந்திரபாபு
கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை
ஏற்றார். மாணவர்களோடு சிறப்பாக உரையாடி அவர்களது
கேள்விகளுக்கு அழகாக பொருத்தமாக விடையளித்தார்.

அவரது ஆக்கப்பூர்வமான அணுகுமுறை பெற்றோர்
மாணவர்களது வாழ்விற்கு ஒரு புது திருப்பு முனையாக
அமைந்தது பெற்றோர் தமது குழந்தைகளை அணுகி
வளர்க்கும் விதம் குழந்தைகள். பெற்றோரை நேசிக்கும் விதம் என எல்லாவற்றிற்கும்
புதுவிளக்கமளிப்பதாக அமைந்தது

இரண்டாவது சிறப்பு விருந்தினராக
M.S.நாகராஜன் கலந்துகொண்டார். சிறப்பு
விளையாட்டு வீரர்களுக்கான அதாவது மாற்றுத்திறனாளி
வீரர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகளுக்கான
செயலாளராக பணியாற்றி வருபவர். சிலம்பம்,
ஜும்பாநடனம், குடை நடனம் யோகா, கரத்தே,
ஏரோபிக்ஸ் ஆகிய பல நிகழ்வுகளில் மாணவர்கள்
முத்திரை பதித்தனர்.

பெற்றோர், சிறப்பு விருந்தினர் முதலிய அனைவரும்
சிறப்பான இந்த இரண்டு நாள் நிகழ்வுக்காக பள்ளி
முதல்வர் தீபா ஸ்ரீராம் அவர்களை வெகுவாகப்
பாராட்டினர். பள்ளியின் நிர்வாக இயக்குனர்
இளவரசன் மற்றும் செயலர்கள் பலரும் கலந்து கொண்டு
சிறப்பித்தனர். வண்ண உடைகளோடும் எராளமான
திறமைகளோடும் மாணவர்கள் ஜொலித்தனர்.

பள்ளி உரிமையாளர் ராஜகோபாலன் அவர்களுக்கும்
பாராட்டுகள் குவிந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here