மஹிந்திரா உயர் மேலாண்மை பொறுப்புகளுக்கு புதிய நியமனங்கள் குறித்த அறிவிப்பு

0
115

சென்னை, டிசம்பர், 20:- 2019:- அடுத்த பதினைந்து மாதங்களில், மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் முக்கிய தலைவர்கள் பலர் ஓய்வு பெறுகிறார்கள். அதனை முன்னிட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெருநிறுவன நிர்வாகத்தின் மிக உயர்ந்த தரங்களைப் பின்பற்றுவதில், கடந்த ஒரு வருடத்தில் வாரியத்தின் ஆளுகை, நியமனம் மற்றும் ஊதியக் குழு (ஜி.என்.ஆர்.சி) ஆகியவை அடுத்த மேலாண்மைப் பொறுப்புகள் குறித்து கட்டமைக்கப்பட்ட மற்றும் கடுமையான மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது, அது இப்போது இயக்குநர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:

 ஏப்ரல் 1, 2020 முதல், ஆனந்த் மஹிந்திரா, மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் வாரியத்தின் நிர்வாகம் அல்லாத பிரிவுக்கு (Non-Executive Chairman) தலைவராக இருப்பார். இது செபி வழிகாட்டுதல்களின்படி எடுக்கப்பட்ட முடிவு. இது வாரியத்தின் சுதந்திரத்தை மேலும் மேம்படுத்தும். நிர்வாகம் அல்லாத தலைவராக, பணியாற்றும் ஆனந்த் மஹிந்திரா, மேலாண்மை  இயக்குநரிடம் வாரியம் சார்பில் வழங்கப்பட வேண்டிய பரிந்துரைகள், குறிப்பாக உத்தி திட்டமிடல், இடர் குறைப்பு மற்றும் வெளிப்புற ஆலோசனை போன்றவற்றில் வழிகாட்டியாக பணியாற்றுவார். கூடுதலாக, நிறுவனம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் குறித்து நிர்வாக இயக்குநருக்கு கருத்து மற்றும் ஆலோசனைகளை அவர் வழங்குவார்.

 டாக்டர் பவன் கோயங்கா மேலாண்மை இயக்குநராகவும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் 2020 ஏப்ரல் 1 முதல் மீண்டும் நியமிக்கப்படுகிறார். இந்த மறு நியமனத்தின் விளைவாக அறிக்கை சமர்ப்பித்தல் தொடர்பான விஷயங்களில் எந்த மாற்றமும் இருக்காது. அவர் 2021 ஏப்ரல் 1 ஆம் தேதி ஓய்வு பெறுவார். டாக்டர் கோயங்கா தனது ஓய்வு பெறும் தேதி வரை சாங்யோங் மோட்டார்ஸின் வாரியத் தலைவராக நேரடி பொறுப்பை தொடர்ந்து வகிப்பார்.

 டாக்டர் அனிஷ் ஷா 2021 ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் அனைத்து குழு வணிகங்களின் முழு மேற்பார்வையையும் மேற்கொள்ளக் கூடிய மேலாண்மை இயக்குநராகவும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் இரண்டு கட்டங்களாக மாற்றம் பெறுவார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here