யமஹா 125 சிசி ஸ்கூட்டர் பிரிவில் நுழைகிறது

0
180

சென்னை, 19 ஜூலை, 2019: தயாரிப்பு வரிசைகள் மற்றும் அனுபவங்கள் மூலம் “யமஹா தனித்துவத்தை” செதுக்கிய தி கால் ஆஃப் தி ப்ளூவின் உற்சாகத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்துவதுடன், இந்தியா யமஹா மோட்டார் (ஐஒய்எம்) பிரைவேட் லிமிடெட் ஆனது ரே இஸட்ஆர் 125 எஃப்ஐ மற்றும் ஸ்ட்ரீட் ரேலி 125 எஃப்ஐ ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தியாவில் தான் 125-சிசி ஸ்கூட்டர் பிரிவில் நுழைவதை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் இனி மோட்டார் சைக்கிள் வரிசையுடன் 125-சிசி ஸ்கூட்டர் பிரிவிலும் தனது சந்தையை பலப்படுத்த நிறுவனம் இப்போது தீவிரமாக செயல்படும். புதிய ஸ்கூட்டர்கள் பல அற்புதமான புதிய அம்சங்கள், புதிய எஞ்சின் தொழில்நுட்பங்கள் மற்றும் அற்புதமான புதிய வண்ணங்களில் கிடைக்கின்றன.

புதிய ரே இசட்ஆர் 125 எஃப்ஐ மற்றும் ஸ்ட்ரீட் ரலி 125 எஃப்ஐ ஆகியவை பிஎஸ் VI இணக்கமான, ஏர் கூல்ட், எரிபொருள் உட்செலுத்தப்பட்ட (எஃப்ஐ), 125 சிசி ப்ளூ கோர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகின்றன, இது 8.2 பிஎஸ் @ 6,500 ஆர்பிஎம் பவர் அவுட்புட் மற்றும் 9.7 என்எம். @ 5,000 ஆர்.பி.எம். உள்ள டார்க்கையும் உற்பத்தி செய்கின்றது. முந்தைய ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது மின் உற்பத்தி +30% மற்றும் எரிபொருள் சிக்கனம் +16% அதிகமாகும்* மற்றும் உடல் எடை 99 கிலோ, இது குறைந்தபட்சம் 4 கிலோ ஆகும். யமஹாவின் முந்தைய ஸ்கூட்டர்களை விட லேசான எடை கொண்டது. புதிய ரே இஸட்ஆர் 125 எஃப்ஐ மற்றும் ஸ்ட்ரீட் ரேலி 125 எஃப்ஐ ஆகியவை ஒரு தனி கன்வென்ஷனல் எலக்ட்ரிக் ஸ்டார்ட்டர் மற்றும் “சைட் ஸ்டாண்ட் எஞ்சின் கட்-ஆஃப் ஸ்விட்ச்” ஆகியவற்றுக்கான தேவை இல்லாமல் ஒரு அமைதியான எஞ்சின் ஸ்டார்ட்டை கொண்டு வர எலக்ட்ரானிக் கண்ட்ரோல்களை பயன்படுத்தும் அனைத்து புதிய 125 சிசி ஸ்கூட்டர்களில் பொருத்தியிருக்கும் “யுனிஃபைட் பிரேக் சிஸ்டம் (யூபிஎஸ்”, “ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் (எஸ்எம்ஜி)” உடன் சவாரி செய்யும் சூழல், ஃப்ரண்ட் டிஸ்க் பிரே ஆகியவற்றை ஆராயும் சென்சார்களை பயன்படுத்து ஒரு சிங்கிள் த்ராட்டல் ட்விஸ்ட் மூலம் உடனே ஸ்டார் செய்யும், மற்றும் எஞ்சின் ஐடிலிங்கை தடுக்கும் “ஸ்டாப் & ஸ்டார்ட் சிஸ்டமை” கொண்டிருக்கின்றன. புதிய ரே இஸட்ஆர் 125 எஃப்ஐ மற்றும் ஸ்ட்ரீட் ரேலி 125 எஃப்ஐ-க்கான இலக்கு வாடிக்கையாளர்கள் 18-24 வயதுக்கு இடையில் அதிகம் உள்ளனர், இவர்கள் சாகசம் செய்யும் மனப்போக்குள்ளவர்களாகவும், தாங்கள் செய்யும் பயணம் மற்றும் அது வழங்கும் செயல்பாட்டினால் தங்கள் சவாரி செய்யும் ஆளுமையின் உண்மையான பிரதிபலிப்பை கண்டறிகிறார்கள்.

புதிய ரே இஸட்ஆர் 125 எஃப்ஐ மற்றும் ஸ்ட்ரீட் ரேலி 125 எஃப்ஐ:
ஸ்டைலிங் கருத்து என்னவென்றால் “ஆர்மர்ட் எனர்ஜி” ஆகும், இது விகிதாச்சாரங்கள், விவரங்கள், ஸ்ட்ரைக்கிங் வடிவமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் இணைக்கப்பட்டுள்ள ஒரு சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிளின் உணர்வைத் தூண்டுகிறது. ஸ்போர்ட்டியான, கூர்மையான தோற்றமுடைய ஹெட்லைட் வகுப்பு சி இணக்கமாக உள்ளது, ஒய் வடிவ எல்ஈடி அமைப்பு ஒளி வடிவமைப்புக்கு அதிக அசல் தன்மையை சேர்க்கிறது. முன் மற்றும் பின்புறத்தில் உள்ள டர்னிங் சிக்னல்கள் மோட்டார் சைக்கிள்களுக்குப் பயன்படுத்தப்படுவது போன்ற தனிப்பட்ட மவுண்டிங் ஸ்டால்க்குகளை பயன்படுத்துகிறது. ரே இஸட்ஆர் 125 எஃப்ஐ டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் இரண்டு வெர்ஷன்களிலும் கிடைக்கிறது, மேலும் டிஸ்க் பிரேக் வெர்ஷன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை புதிய அம்சமாகப் பெற்றுள்ளது. புதிய ரே இஸட்ஆர் 125 எஃப்ஐ டார்க் மேட் ப்ளூ, மெட்டாலிக் பிளாக், சியான் ப்ளூ, மேட் ரெட் மெட்டாலிக் மற்றும் ரெட்டிஷ் யெல்லோ காக்டெய்ல் உள்ளிட்ட பல்வேறு வண்ண வண்ண வகைகளில் கிடைக்கிறது.

புதிய ஸ்ட்ரீட் ரேலி 125 எஃப்ஐ மோட்டார் சைக்கிள் அம்சங்களை ஒரு ஸ்கூட்டருடன் இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரஷ் கார்ட்ஸ் சவாரி செய்வோரி கைகளை எதிரே வரும் காற்றோட்டத்திலிருந்து பாதுகாக்கின்றன மற்றும் இயந்திரத்திற்கு ஒரு ஸ்போர்ட்டியான, சாகச-தாக்கத்தைத் தருகின்றன. இது கூடுதலாக முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஒரு ரக்ட் பிரேம் போல வடிவமைக்கப்பட்ட சைட் பேனல்கள், பிளாக்-பேட்டர்ன் டயர், ஸ்போர்ட்டி கலர் வீல் ஸ்ட்ரைப்ஸ் (முன்புறம் மற்றும் பின்புறம்) மற்றும் மெட்டாலிக் புரொடெக்டர்களைப் போல வடிவமைக்கப்பட்ட சைட் பேனல்கள் ஆகியவற்றை வழங்குகிறது. புதிய ஸ்ட்ரீட் ரேலி 125 எஃப்ஐ இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது – டீப் பர்பிளிஷ் ப்ளூ மெட்டாலிக் மற்றும் ஸ்பார்க்கிள் கிரீன்.

இன்று சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​யமஹா மோட்டார் இந்தியா குழுமத்தின் தலைவர் திரு. மோட்டோஃபூமி ஷிதாரா கூறியதாவது, “புதிய ரே இஸட்ஆர் 125 எஃப்ஐ மற்றும் ஸ்ட்ரீட் ரேலி 125 எஃப்ஐ ஆகியவை சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தினசரி பயணம் செய்யும் ஒரு நோக்கத்தை தாண்டி ஸ்கூட்டர்களுடன் சாகசம் மற்றும் வேடிக்கை செய்யும் மனப்பான்மையுள்ள வாடிக்கையாளருக்கு இவை ஏற்றவையாகும். புதிய ரே இஸட்ஆர் 125 எஃப்ஐ மற்றும் புதிய ஸ்ட்ரீட் ரேலி 125 எஃப்ஐ ஆகியவை சாலையில் அதிக உற்சாகத்தையும் விளையாட்டு சாகசங்களையும் ஏற்படுத்தக்கூடிய கூடுதலான சக்தி மற்றும் வடிவமைப்பு சிறப்பம்சங்களை கொண்டுள்ளன. 125 சிசி ஸ்கூட்டர் பிரிவில் நுழைவதில் நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது, இதனால் அதிக சக்தி, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட பொறியியல் மூலம், ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கு சவாரி மற்றும் சாகசத்தின் ஆர்வத்தை யமஹாவால் நிறைவேற்ற முடியும்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here