அம்பத்தூர் தொழிற்பேட்டை யை மழை மற்றும் வெள்ளப்பெருக்கு இருந்து காப்பாற்ற வேண்டும் அம்பத்தூர் தொழில்முனைவோர் சங்கம் வேண்டுகோள்

0
133

அம்பத்தூரில் தொழில் நிறுவனங்கள் 3 லட்சம் நபர்களைப் பணியில் அமர்த்தியிருக்கின்றன. ரூ . 10 , 000 கோடி வருமானம் – அவற்றில் ரூ . 3 , 000 கோடி ஏற்றுமதிகளின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 10 % – 15 % வளர்ச்சி,கழிவுகளைப் பண்படுத்தும் பொதுவான ஆலை மற்றும் கூலன்ட் ரெக்கவரி ஆலை நிறுவப்பட்டுள்ளன. திடக்கழிவு சேகரிப்பு மற்றும் பிரித்தெடுப்பு கால்வாய்களை முறையின்றித் திட்டமிடுதல் மற்றும் அகலப்படுத்துதல் காரணமாக வெள்ளப் பெருக்கு, கிராம மக்களுக்கு வடிகால் வசதி இல்லாமை , எனவே கழிவுநீரானது கால்வாயில் கலக்கப்படுகிறது. இதுதான் இன்றைய அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழில் முனைவோர்களின் ஏக்க குரலாக உள்ளது.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 1 , 430 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் அமைந்துள்ளது . தமிழக அரசின் தொழில் துறையால் 1960 – 61 ஆண்டில் நிறுவப்பட்டது . டான்சிட்கோ அமைப்பைப் பொறுப்பாளராகக் கொண்டு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சிகளை உருவாக்கிப் பேணி வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது . இந்த வட்டாரத்தில் உள்ள தொழில் முயற்சி மேற்கொள்ளும் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆற்றல் திறன்களை எடுத்துக்காட்டி , நம் நாட்டிலுள்ள பெரிய தொழிற்சாலைகளின் தேவைகளை நிறைவேற்றுவதே இதன் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
இது குறித்து சங்க தலைவர் ஏ . என் . சுஜீஷ் நம்மிடம் கூறும்போது , பல்வேறு தயாரிப்புகளிலும் பல்வேறு சேவைகளிலும் ஈடுபட்டுள்ள 2 , 000 – க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் , 3 லட்சம் நபர்களைப் பணியில் அமர்த்தியுள்ளன . இவர்களில் சுமார் ஒரு லட்சம் பேர் பெண்கள் ஆவர் . இந்தத் தொழிற்பேட்டையில் கிடைக்கக் கூடிய மொத்த வருமானம் சுமார் ரூ . 10 , 000 கோடி ஆகும் . இதில் சுமார் ரூ . 3 , 000 கோடி ஏற்றுமதி மூலம் கிடைக்கிறது ” என்றார் .

மேலும், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்கள் பாடி . கொரட்டூர் , கருக்கு . மண்ணூர்பேட்டை , முகப்பேர் , வானகரம் , அத்திப்பட்டு மற்றும் திருமுல்லைவாயில் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வருமானத்தையும் வேலை வாய்ப்பையும் தருகின்றன . இந்த இடங்களில் சுமார் 4 லட்சம் நபர்கள் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர் . சென்னையைச் சுற்றியுள்ள , அசல் உறுப்புகளைத் தயாரிக்கும் ( OEM ) பெரிய அமைப்புகள் தங்களுக்கு முறையாகத் தேவைப்படும் பாகங்களுக்கு அம்பத்தூரையே நம்பியிருக்கின்றன .

அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் ( AIEMA ) 1963 – ல் தொடங்கப்பட்டது . இங்குள்ள நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காண்பதற்குப் பல்வேறு அரசு மற்றும் சட்டபூர்வமான அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு , நிறுவனங்களின் நலனைப் பாதுகாப்பதற்காக இது அமைக்கப்பட்டது .

2004 – ல் சென்னை ஆட்டோ ஆன்ஸில்லரி தொழில் உள்ளமைப்பு மேம்பாட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது . மாநில, மத்திய அரசுகளுடன் இங்குள்ள நிறுவனங்களின் நிதியுதவியுடன் இந்த அமைப்பு அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தால் உருவாக்கப்பட்டது . இது டான்சிட்கோவின் பிரதிநிதியாக , அம்பத்தூர் தொழிற்பேட்டையின் உள்ளமைப்பின் மேம்பாடு மற்றும் பராமரிப்பை மேற்கொண்டது . இந்த உள்ளமைப்பை உருவாக்குவதற்கான மொத்த முதலீடு சுமார் ரூ . 65 கோடி ஆகும் .
கழிவுநீரைப் பண்படுத்துவதற்கு இரண்டு STPஆலைகள் அமைக்கப்பட்டன . தெற்குப் பகுதியில் 3 MLD ஆலை மற்றும் வடக்குப் பகுதியில் 2 MLD ஆலை . மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் வரையறுக்கப்பட்ட குறிப்புகளுக்கு ஏற்ப இந்த அமைப்புகள் செயல்பட்டுவருகின்றன .

வெள்ள நீர் வடிகால் அமைப்புகள் ( SWD ) சரிசெய்யப்பட்டு , வெள்ளத்தைத் தடுப்பதற்கு மறு அமைப்பு செய்யப்பட்டன . தொழிற்பேட்டையில் 42 கிலோமீட்டர் நீளத்திற்குப் புதிய சாலைகள் போடப்பட்டன . தொழிற்பேட்டை சாலைகள் முழுவதும் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டன .

சமீபத்திய ஆக்க முயற்சிகள் குறித்து பொதுச் செயலாளர் ஏ . என் . கிரீசன் கூறும்போது, . ” இப்போது , 2 MLD திறன் கொண்ட கழிவுகளைப் பண்படுத்தும் பொதுவான ஆலை நிறுவப்பட்டுள்ளது . நிறுவனங்களின் செயல்பாட்டால் உருவாகும் கழிவுகளைப் பண்படுத்துவதற்கான இந்த அமைப்பு 2019 செப்டம்பர் முதல் செயல்பட்டு வருகிறது . எங்களிடம் உள்ள இரண்டு கூலன்ட் ரெக்கவரி ஆலைகளுடன் கூடுதலாக , புதிய தொழில்நுட்ப சாதனங்களைப் பெறப் போகிறோம் . கூலன்ட் எண்ணெயை மீட்பதற்காகத் தனித்தனி நிறுவனங்களுக்கு இவற்றை எடுத்துச் செல்லலாம் ” என்று கூறினார் .

மேலும் அவர், ” திடக் கழிவுகளை சேகரிப்பதற்கும் பிரித்தெடுப்பதற்கும் முறையான அமைப்பு உள்ளது . உறுப்பினர் நிறுவனங்களிலிருந்து ஒவ்வொன்றாக அவ்வப்போது முறையாகக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு , மக்கும் குப்பை மற்றும் இதர வகைக் கழிவுப் பொருள்களைப் பிரிப்பது , பயிர் செய்யப்படுகிறது . தினந்தோறும் சுமார் 19 மெட்ரிக் டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்படுகின்றன . அபாயகரமான பொருள்கள் , தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட , விசேஷ சேவை வழங்குவோர் மூலம் அப்புறப்படுத்தப்படுகின்றன. மாதம்தோறும் சுமார் 20 அபாயகரமான கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்படுகின்றன ” என்று அவர் கூறினார்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் பசுமையைப் பேணுவோம் , தூய்மையைப் பாதுகாப்போம் – பசுமையைப் தொழிற்பேட்டையில் மரங்கள் நடப்பட்டுள்ளன. எனவே, இந்த அரசு மற்றும் அதிகாரிகளும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மழைநீர் தேங்கா வண்ணமும், வெள்ளப் பெருக்குகள் ஏற்படாவண்ணமும், தொழில் பாதிக்கப்படாவண்ணமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் ஏ. என். சுதீஷ், பொதுச்செயலாளர் ஏ என். கிரீசன், துணைத் தலைவர் எம்.பாலச்சந்திரன் மற்றும் ஜி. கிருஷ்ணமூர்த்தி உள்பட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here