ஹோண்டாவின் தேசிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னைக்கு வருகிறது

0
97

சென்னை, 17 டிசம்பர், 2019: நாளைய இந்திய சாலைகளை விபத்துக்கள் இல்லாதவையாக கட்டமைப்பதற்கான பங்களிப்பை வழங்கும் விதத்தில், ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட், அதன் தேசிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னைக்கு கொண்டு வந்து, ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷாசன் ஜெயின் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 2,000க்கும் அதிகமான இளம்பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.

3 நாட்களுக்கும் மேலாக விழிப்புணர்வை வழங்கிய ஹோண்டாவின் தேசிய சாலைப் பாதுகாப்பு நிகழ்ச்சியானது, மாணவர்கள் பாதசாரியாக நடந்து செல்லும் போது, அல்லது ஒரு இரு-சக்கர வாகன ஓட்டியாக, அல்லது நான்கு-சக்கர வாகன ஓட்டியாக சாலையில் செல்லும் போது, சாலைப் பாதுகாப்பின் மீதான முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள உதவியது. ஒரு வருடத்துக்கு முன்பாக இந்த சமூக பொறுப்புணர்வு நிகழ்ச்சியின் தேசிய அளவிலான தொடக்கத்திலிருந்து, ஹோண்டா 2வீலர்ஸ் இந்தியாவானது, 120க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து கற்பித்து உள்ளது.

சாலைப் பாதுகாப்பு குறித்து இளம் தலைமுறையினருக்கு உணர்த்துவதன் மீதான ஹோண்டாவின் ஈடுபாடு குறித்துப் பேசும் போது, திரு. பிரபு நாகராஜ், துணைத் தலைவர் – பிராண்ட் & தகவல் தொடர்பு, ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் பிரைவேட் லிமிடெட், கூறியதாவது, “ஹோண்டா, பாதுகாப்புக்கே உயர் முன்னுரிமை அளிக்கிறது. வாகன வணிகத்தில் ஒரு பொறுப்புள்ள நிறுவனமாக நாங்கள், ஒரு தொலைநோக்குப் பார்வையுடன், பாதுகாப்பாக வாகனத்தை இயக்கும் பழக்கங்களை இந்த சமுதாயத்துக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறோம். இந்த தேசிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முன்னெடுப்பானது, இன்றைய இளம் தலைமுறையினர்களை மாற்றத்தை நோக்கி கொண்டு செல்லவும், ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கும் எடுத்து வைக்கப்படும் ஒரு அடியாக இருக்கிறது. ஹோண்டாவில், சென்னையைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட இளம் பெண்களை சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க வைத்தது மட்டும் அல்லாமல், அவர்களை சாலைப் பாதுகாப்புக்கான தூதுவர்களாக செயல்பட செய்து, அவர்களுடைய குடும்பத்தாருக்கும் விழிப்புணர்வைப் பரவச் செய்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here