டாக்டர் பிரதாப் சி. ரெட்டிக்கு பெர்லினில் நடைபெற்ற விழாவில் ஐ.எம்.டி.ஜே. வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது

0
61

சென்னை, டிசம்பர் 17, 2019:- ஜெர்மனியின் பெர்லினில் அண்மையில் நடைபெற்ற ‘ஐ.எம்.டி.ஜே. மருத்துவ பயண விருதுகள் 2019’ என்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவரும் நிறுவனருமான டாக்டர் பிரதாப் சி. ரெட்டிக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கவுரவிக்கப்பட்டது. மருத்துவ மதிப்பு பயணத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு டாக்டர் ரெட்டியின் சிறந்த பங்களிப்புக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள அப்பல்லோ சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை ‘ஆண்டின் சிறந்த சர்வதேச புற்றுநோய் மையமாக’ அங்கீகரிக்கப்பட்டது.

இந்த விருதுக்கான நீதிபதிகளின் மதிப்பீட்டில், மருத்துவ பயணம் மற்றும் மருத்துவ சுற்றுலா வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த ஒரு நபருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவது வழக்கம். 2019 டிசம்பர் 1 முதல் 3 ஆம் தேதி வரை ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற வருடாந்திர ஐ.எம்.டி.ஜே. மருத்துவ பயண உச்சி மாநாட்டில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவரும், நிறுவனருமான டாக்டர் பிரதாப் சி. ரெட்டி இது குறித்துக் கூறுகையில், “இந்த விருது வழங்கப்படுவது ஒரு மிகப் பெரிய மரியாதை, இது ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உலகத் தரம் வாய்ந்த சுகாதாரத்துக்கான ஒரு கலங்கரை விளக்கமாக அப்பல்லோ மருத்துவமனைகள் மேற்கொண்ட அயராத முயற்சிகளுக்கான அங்கீகாரமாகும். மேற்கத்திய நாடுகளில் உள்ள சிறந்த சுகாதார சேவை வழங்குபவர்களுக்கு இணையாக மருத்துவ சிறப்பைப் பற்றிய எனது பார்வை இன்று ஒரு யதார்த்தமாக உள்ளது. ஆனால் செலவு என வரும்போது மேற்கத்திய நாடுகளில் அதிக செலவாகிறது. அணுகக்கூடிய மற்றும் குறைந்த செலவில் தரமான, அதிநவீன சுகாதாரத்துறையில் கவனம் செலுத்துவதன் விளைவாக அப்பல்லோ மருத்துவமனைகள் உலகெங்கிலும் இருந்து நோயாளிகளை வரவேற்கின்றன. குணப்படுத்துவதில் தேர்ந்த மற்றும் துடிப்பான கலாச்சாரத்தின் வளமான பாரம்பரியத்துடனான சிகிச்சையை அப்பல்லோவில் உலகெங்கிலும் இருந்து வரும் நோயாளிகள் அனுபவிக்க வருகிறார்கள்.” என்றார்.

“முழு உலகிற்கும் விருப்பமான உலகளாவிய சுகாதார மையமாக மாற இந்தியாவுக்கு ஆற்றல் உள்ளது என்று நான் எப்போதும் நம்புகிறேன். தரமான செயல்முறைகள், சிறந்த நோயாளி பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தொடர்ச்சியான புதுமைக் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் தீராத முயற்சியும் எண்ணமும் கொண்டு செயல்படும்போது எனது நம்பிக்கை விரைவில் நிறைவேறும்.” என்று அவர் மேலும் கூறினார். 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அப்பல்லோ மருத்துவமனைகளுக்கு வருகை தரும் சர்வதேச நோயாளிகளுக்கு தன்னலமற்ற இடைவிடாத சேவையை வழங்கும் அனைத்து ஆலோசகர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவி ஊழியர்களின் பங்கையும் டாக்டர் ரெட்டி நினைவு கூர்ந்து அவர்களது பணிகளுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.

சென்னையின் அப்பல்லோ சிறப்பு புற்றுநோய் மருத்துவமனையை ‘ஆண்டின் சிறந்த சர்வதேச புற்றுநோய் மையம்’ என்று அங்கீகரித்து வழங்கப்பட்ட விருது குறித்து அவர் கூறுகையில், “அப்பல்லோ சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை சமீபத்தில் புற்றுநோயியல் சிகிச்சையில் ஒரு மைல்கல்லை எட்டியது, இந்த ஆண்டு தொடங்கப்பட்ட புரோட்டான் சிகிச்சையில் 100 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயைக் குணப்படுத்தும் எங்கள் பயணம் தொடங்கியது, அதன் பின்னர் பயங்கரமான அந்த நோயை எதிர்த்துப் போராடி வெற்றிபெற தேவைப்படும் எந்த முயற்சியையும் தவற விட்டுவிடாமல் செயல்படுகிறோம். இந்த பயணம் பல முதல் நிகழ்வுகளை உள்ளடக்கிய சிறப்பு மிக்கவை. அவற்றில் மிகச் சமீபத்தியது தென்கிழக்கு ஆசியாவின் முதல் புரோட்டான் மையம் ஆகும்0”. என்றார். ஐ.எம்.டி.ஜே. விருதுகளை ஐ.எம்.டி.ஜே. தலைமை ஆசிரியர் கீத் பொல்லார்ட் தலைமையிலான. மருத்துவ பயண நிபுணர்களின் சுதந்திரமான ஒரு குழு தீர்மானிக்கிறது, மருத்துவ பயணம் மற்றும் மருத்துவ சுற்றுலா மீதான ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில் அதை மேலும் ஊக்குவிக்க, சர்வதேச மருத்துவ பயண இதழ் (The International Medical Travel Journal –IMTJ- ஐஎம்டிஜே) 2007-ல் நிறுவப்பட்டது இந்த ஐ.எம்.டி.ஜே, இங்கிலாந்தை மையமாகக் கொண்ட ஆன்லைன் வெளியீட்டு நிறுவமானமான லாயிங் புய்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திற்கு இது சொந்தமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here