ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டியது காலத்தின் கட்டாயம்! தொல்.திருமாவளவன் கண்டனம்

0
57
பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அங்கே நடைபெற்ற   போராட்டத்தின்போது 4பேர் பலியாலியுள்ளனர்;பலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாமியா மிலியா இசுலாமிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்திக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இத்தாக்குதலில் காயமடைந்த  மாணவர்கள்  பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் காவல்துறையினர் அத்துமீறி நுழைந்ததும், தாக்குதல் நடத்தியதும், மாணவர்களைக் கைகளை உயர்த்தி அணிவகுப்பாக நடக்க வைத்ததும், கைது செய்ததும் சட்டவிரோதமானது. அத்துடன், காவல்துறையினரே இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கும் காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினரின் இந்தப்போக்கை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தில்லி துணை முதலமைச்சர் திரு.மனிஷ் சிசோடியா  அவர்கள், பேருந்தில் காவலர்கள் கேன் வைத்து பெட்ரோலை ஊற்றுகின்ற சில புகைப்படங்களை  தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  `இந்தப் புகைப்படங்களைப் பாருங்கள் பேருந்துகள் மீது யார் தீவைத்தது என்பது தெரியும். பா.ஜ.கவின் மோசமான அரசியலுக்கு இந்தப் புகைப்படங்களே சாட்சி. இதற்கு பா.ஜ.க தலைவர்கள் விளக்கமளிக்க முடியுமா? ” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here