சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போயிங் 787-10 ஐ சென்னைக்கு இயக்கவிருக்கிறது

0
185

சென்னை, 16 டிசம்பர் 2019: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) சென்னை-சிங்கப்பூர் பிரிவில் ஏர்பஸ் A330-300 க்குப் பதிலாக போயிங் 787-10 விமானத்தை அறிமுகம் செய்வதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது. இந்த புதிய தலைமுறை விமான வகையை சென்னைக்கு இயக்கும் முதல் பன்னாட்டு விமான சேவை நிறுவனமாக SIA திகழ்கிறது. தொடக்க சேவை SQ529 சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மே 20, 2019 அன்று 2315 மணிக்கு புறப்படும்.

இந்த புதிய விமான அறிமுத்தின் மூலம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சென்னையிலிருந்து வாரத்திற்கு 10 என்றிருந்த அதன் விமான சேவை நிகழ்வெண் ஐ 13 ஆக அதிகரித்திருக்கிறது. அதன் துணை நிறுவனமான சில்க் ஏர் உடன் சேர்ந்து ஜூன் 1, 2020 க்குள் இந்த எண்ணிக்கை வாரத்திற்கு 17 விமான சேவை என்ற அளவில் படிப்படியாக உயரும்.

“இந்த நவீன தலைமுறை விமானத்தின் மூலம் சென்னைக்கு அதன் சேவையை தொடங்குவதில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பெருமகிழ்ச்சி கொள்கிறது. உருவாக்கம் மற்றும் சேவைகளை தலையாய சிறப்புடன் அளிப்பதில் உறுதிப்பாடு கொண்ட எங்களது நிலைப்பாட்டுக்கு இணங்க போயிங் 787-10 அளிக்கும் வசதியுடன் விருது–பெற்ற எங்களது பயண நேர சேவைகள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற பயண அனுபவத்தை வழங்கும்” என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இன் இந்திய பொது மேலாளர் திரு டேவிட் லிம் கூறினார்

எடை குறைந்த கூட்டுப்பொருள் கொண்டு வடிவமைக்கப்பட்ட 68 மீட்டர் நீளத்துடன் கூடிய 787-10 போயிங்கின் டிரீம்லைனர் வரிசையில் மிக நீளமான வடிவமைப்பாகும். ஈடற்ற இயக்க செயல்திறன் மற்றும் மேலான தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் ஏர்லைனின் விமான வரிசையில் கூடுதலாக அறிமுகப்படுத்தப்படும் இந்த சேவை மேலும் அதிக அமைதியான பயண அனுபவத்தை அளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிச்ச அளவுகளை தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ளக்கூடிய மின்னணுவியல் மூலம் ஓளி அளவை மங்கலாக்கக்கூடிய பெரிய ஜன்னல்கள், சுத்தமான காற்று மற்றும் அமைதியான மற்றும் சுகமான பயணத்தை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here