கடுமையான முழங்கால் மூட்டு தேய்மானத்திற்கு ஸ்டெம்செல் சிகிச்சை – டாஸ் மருத்துவமனை சாதனை !

0
127

ஆர்த்ரிடிஸ் நோய் கோடிக்கணக்கான மக்களை பாதிக்கிறது . அதிலும் குறிப்பாக முதியோரை அதிகம் தாக்குகிறது . இந்தியாவில் மட்டும் சுமார் பதினெட்டு கோடி பேர் ஆர்த்ரிடிஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர் . இதில் முழங்கால் மூட்டு தேய்மானத்தால் பாதிக்கப்படுவோர் ஏராளம் . இதற்கு இது நாள் வரையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வாக இருந்து வந்தது .

தற்போது இதற்கு மாற்றாக ஸ்டெம்செல் சிகிச்சை முறை ( Keyhole ) சிறு துவாரம் வழியாக முழங்கால் மூட்டின் தேய்ந்து விட்ட பகுதியை சுத்தப்படுத்தி பின்னர் நோயாளியின் இடுப்பு எலும்பில் இருந்து சுமார் 50 மில்லி மஜ்ஜை எடுத்து அதில் இருந்து ஸ்டெம்செல் பிரித்து எடுக்கப்பட்டு தனித்துவம் வாய்ந்த ஜெல் ஒன்றுடன் சேர்த்து சேதமான மூட்டு எலும்பில் ஒட்டப்படுகிறது . இது உடனடியாக இறுகிக் கொள்கிறது . இந்த சிகிச்சை ஒரு மணி நேரத்தில் முடிவடையும் மற்றும் ஒரே அமர்வில் செய்யப்படுவதால் அடுத்த நாளே நோயாளியால் நடக்க முடியும் .

மேலும் ஒரு சில மாதங்களில் அந்த தேய்மான பகுதியில் புதிய குருத்தெலும்பு வளர்ந்து முழுமையான வலி நிவாரணம் கிடைக்கும் . முதன் முறையாக இந்த சிகிச்சை இந்தியாவில் டாஷ் மருத்துவமனை அறிமுகப்படுத்தியது. இந்த சிகிச்சை கடந்த 7 வருடமாக டாஷ் மருத்துவமனையில் செய்யப்பட்டு வருகிறது . இதுவரை சுமார் 500 நோயாளிகளுக்கு செய்யப்பட்டுள்ளது . முதலில் இந்த சிகிச்சை ஆரம்பகட்ட ஆர்த்ரிடிஸ் மற்றும் 65 வயது உட்பட்டவர்களுக்கு மட்டும் செய்யப்பட்டது . தற்போது இந்த சிகிச்சை கடுமையாக பாதிக்கப்பட்ட மற்றும் மூட்டு வளைவு ஏற்பட்ட ஆர்த்ரிடிஸ் நோயாளிகளுக்கும் செய்ய முடியும் என்பதை எங்கள் ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படுத்துகிறது . எங்கள் ஆராய்ச்சி டாஷ் மருத்துவமனையுடன் இணைந்து தென்கொரியாவில் உள்ள கத்தோலிக் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தில் உள்ள Contryburry பல்கலைக்கழகம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது .

இந்த ஆராய்ச்சி முடிவுகள் Jappanese Society for Regenerative Medicine என்ற உயரிய அமைப்பின் அதிகாரப்பூர்வ இதழில் எங்கள் ஆராய்ச்சி கட்டுரையை வெளியிடப்பட்டுள்ளது . இது போன்ற ஆராய்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்ட மூட்டுவலி ஏற்பட்டவர்களுக்கு இது போன்று முதல்முறையாக உலகிலேயே செய்யப்பட்டுள்ளது என்பதை இந்த ஆராய்ச்சி கட்டுரை வெளியிடுள்ளது . இந்த சிகிச்சை எங்கள் மருத்துவமனையில் சுமார் 150 நோயாளிகளுக்கு செய்யப்பட்டுள்ளது . 65 முதல் 90 வயது வரை உள்ளவர்களுக்கு கடுமையாக பாதிக்கப்பட்ட முழங்கால் மூட்டு ஆர்த்ரிடிஸ் உள்ளவர்களுக்கு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது . மேலும் இச்சிகிச்சை பிரபலமடைந்து வருவதால் நாளுக்கு நாள் இதை செய்து கொள்பவரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது . இந்த சிகிச்சையில் செயற்கை உலோகங்கள் மூட்டில் பொருத்தப்படாமல் மூட்டின் இயற்கை தன்மை மாறாமல் சொந்த மூட்டைப் பாதுக்காக்க முடிகிறது . இதில் நோய் தொற்று போன்ற சிக்கல் ஏற்படாது . அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த ஸ்டெம்செல் சிகிச்சை முறை முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சையை சுமார் 50 சதவீதம் குறைந்துவிடும் மற்றும் இந்த புதிய புரட்சிகர ஸ்டெம்செல் சிகிச்சையே எதிர்காலத்தில் உலகம் முழுதும் பின்பற்ற போகும் சிகிச்சை என்பதில் ஐய்யமில்லை .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here