ஐஎஸ்ஏஏஎம்இ 47வது மாநாடு: சென்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்

0
217

சென்னை, டிச. 14- 2019: சென்னையில் லயன்ஸ் கிளப் இண்டர்நேஷனலின் ஐஎஸ்ஏஏஎம்இ 47வது மாநாட்டை கவர்னர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார். `வணக்கம் சென்னை’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட இந்த மாநாடு ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஐஎஸ்ஏஏஎம்இ 47வது மாநாட்டை கவர்னர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்.

லயன்ஸ் கிளப் இண்டர்நேஷனல் மிக வேகமாக வளர்ந்து வரும் சேவை அமைப்பாகும். இந்த சங்கத்தில் 48,470 லயன்ஸ் கிளப்புகள் மற்றும் இதில் 210 நாடுகளைச் சேர்ந்த 14 லட்சத்து 60 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த மாநாட்டில், அமைப்பு குழு தலைவர் லயன் ஜி. ராமசுவாமி வரவேற்புரையாற்றுகிறார். சிறந்த கிளப்புகள், எல்சிஐஎப் விருதுகள் மற்றும் இதர விருதுகள் சர்வதேச தலைவர் லயன் டாக்டர் ஜுங் யூல் சோய் மற்றும் லயன்ஸ் கிளப் இண்டர்நேஷனல் தலைவர் குத்ரன் ஆகியோரால் 16-ந்தேதி வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here