விருதுநகர் அருகே ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் திருநங்கை

0
135

விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சித்தலைவர் பதவிக்கு ஊர் மக்களின் ஆதரவோடு திருநங்கை ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

விருதுநகர் அருகே சின்னபேராளியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (எ) அழகுபட்டாணி என்ற திருநங்கை, பெரிய பேராளி ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இவரை மனு தாக்கல் செய்ய ஊர்க்காரர்கள் உடன் வந்தார்கள். 65 வயதாகும் விவசாயக் கூலியான இவர் மீது ஊர்மக்கள் அன்பாக இருக்கிறார்கள். அவர்கள் வற்புறுத்தி தேர்தலில் போட்டியிட வைத்துள்ளனர்.

அழகர்சாமி என்ற அழகு பட்டாணி கூறுகையில்,“கூலி வேலை செய்து வருகிறேன். என்மீது ஊர் மக்கள் ரொம்ப பாசமாகவும் அன்பாகவும் இருந்து வருகின்றனர். மக்கள் கேட்டுக்கொண்டதால் ஊராட்சித்தலைவர் பதவிக்குப் போட்டியிட சம்மதித்தேன். மக்களே, என்னை வெற்றிபெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தேர்தலில் வெற்றிபெற்றால் எங்கள் ஊருக்குச் சுத்தமான குடிநீரும், சுகாதாரமான கழிப்பறை வசதிகளையும் ஏற்படுத்தித் தருவேன்” என்று இயல்பாகக் கூறினார். திருநங்கை போட்டியிடக் காரணமான கிராம மக்களைப் பல்வேறு தரப்பினரும் பாரட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here