சூடான் தீ விபத்தில் காயமடைந்தவர்களை விமான ஆம்புலன்ஸ் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும் மத்திய அமைச்சரிடம் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

0
237

சூடான் தீ விபத்தில் காயமடைந்தவர்களை விமான ஆம்புலன்சின் (Air Ambulance) மூலம் இந்தியாவிற்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்கள் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர் அவர்களை இன்று சந்தித்து வலியுறுத்தினார்.

“சுடான் நாட்டில் சீலா செராமிக்கா என்னும் டைல்ஸ் தொழிற்சாலையில் 19
தமிழர்கள் உட்பட 60 இந்தியர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த 3.12.2019
அன்று அந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 தமிழர்கள் உட்பட 20
இந்திய தொழிலாளர்கள் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர்.

தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அங்கே சிகிச்சை அளிக்க இந்திய
தூதரகத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால், சூடான் நாட்டின் கார்ட்டோம் நகரில் தீ காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ வசதிகள் இல்லை. அதனால், காயமடைந்தவர்களை விமான ஆம்புலன்சின் (Air Ambulance) மூலம் இந்தியாவிற்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க இந்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொழிற்சாலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் இந்த தீ விபத்து
நிகழ்ந்துள்ளது. அதனால், இந்த விபத்தில் பலியானவர்களுக்கும்
காயமடைந்தவர்களுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை அந்நிறுவனம் வழங்க வேண்டும்.” என எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர் அவர்களை இன்று சந்தித்து வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here