இரும்புச்சத்து குறைபாடு தினத்தன்று, டிஎஸ்எம்மின் நு-சக்தி சரியான உணவைச் சாப்பிடவும், சீரான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்கவும் சென்னை மக்களை வலியுறுத்துகிறது!

0
66

இரும்புச்சத்து குறைபாடு தினத்தை முன்னிட்டு உடல்நலம், ஊட்டச்சத்து மற்றும் நிலையான வாழ்வியல் ஆகியவற்றில் உயிர்ப்புடன் செயல்பட்டு வரும் உலகளாவிய அறிவியல் சார்ந்த நிறுவனமான ராயல் டிஎஸ்எம்மின் (Royal DSM) பிராண்டான நு-சக்தி (NuShakti), இரும்புச்சத்து குறைப்பாட்டால் உடல்நலத்தில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னையில் நடத்தியது.  ஆரோக்கியமான இரும்புச்சத்து அளவுகள் மற்றும்  வீட்டு உணவை வலுவூட்டுவதற்கான முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுவதற்காகவும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.

இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களுடன் வானொலி உரையாடல் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதன்மூலம் இந்நிகழ்ச்சியைக் கேட்பவர்களுக்கு தங்கள் உடல்நலத்தைப் பேணுவதைப் பற்றியை கல்வியை வழங்குவதுடன் தினந்தோறும் தாங்கள் உண்ணும் உணவுகளில் இரும்புச் சத்து உள்ளிட்ட முக்கிய சத்துகளை எடுத்துக்கொள்வது தொடர்பான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன. கூடுதலாக  சென்னையின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 5,000 பேருக்கு நு-சக்தி பவர் மிக்ஸ் (Nu-Shakti Powermix) மூலம்  வலுவூட்டப்பட்ட  எலுமிச்சை சாதம் வழங்கப்பட்டத             டிஎஸ்எம் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குநரான அலோக் கோலி (Alok Kohli, Business Director, DSM India) இதுபற்றி கூறும்போது, “தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (National Family Health Survey) தரவுகளின்படி 1998 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் 15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட  50 சதவீத பெண்கள் இரும்புச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். சத்தான உணவுகளை எளிதில் அணுகும் வாய்ப்புகளையும் வசதிகளையும் வழங்கி இந்திய மக்களிடையே நிலையான ஒரு உணவு முறையை கட்டியெழுப்ப நு-சக்தி உறுதி பூண்டுள்ளது.  இரும்பு சத்து குறைபாடு தினத்தில் நடக்கும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரமானது  ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சமநிலையற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், ரத்த சோகை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு சுகாதார  பிரச்சினைகளையும்  சமாளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது” என்றார்.          வீட்டில் வலுவூட்டல் என்ற கருத்தின் அடிப்படையில், வீட்டில் சமைக்கப்படும்  உணவுகளின் ஊட்டச்சத்து மதிப்பை நு-சக்தி அதிகரிக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களின் உனவுப் பழக்கத்தை மாற்றாமல்,   உணவின் சுவை மற்றும் தோற்றத்தை  மாற்றாமல்  சத்தான, அதிக  சமச்சீரான  உணவைப் பெற இது உதவும்.  நுசக்தியின் தயாரிப்புகளில் சாதத்துக்கான பவர்மிக்ஸ் (வலுவூட்டப்பட்ட அரிசி  தானியம்), ஆட்டாவுக்கான பவர்மிக்ஸ் (வலுவூட்டப்பட்ட ஆட்டாமிக்ஸ்மீ (வலுவூட்டப்பட்ட ஆரஞ்சு சுவைகொண்ட பானத்தின்கலவை), வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்களின் கலவை  (நுண்ணூட்டசத்து கொண்ட உணவில் கலக்கும் துகள்கள்)  உள்ளிட்டவை அடங்கும். தமிழகத்தில் நுசக்தியின் தயாரிப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நவீன ஸ்டோர்களிலும், கிரானா (சில்லறை) ஸ்டோர்களிலும் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் எளிதில் வாங்கக்கூடிய விலையில் இந்த தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தயாரிப்புகளின் குறைந்தபட்ச விலையாக ரூ.5 உள்ளது. இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள  www.nu-shakti.com என்ற இனையதளத்தைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here